»   »  புலி, புலி, புலின்னு பொங்கிய டி.ஆர்.: சால்வையை போர்த்தி 'ஆஃப்' செய்த விஜய்

புலி, புலி, புலின்னு பொங்கிய டி.ஆர்.: சால்வையை போர்த்தி 'ஆஃப்' செய்த விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி இசைவெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் இளைய தளபதி விஜய்யை ஓவராக புகழ்ந்து பேசினார். இதை பார்த்த விஜய் மேடைக்கு ஓடி வந்து அவரின் பேச்சை நிறுத்தினார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் விஜய்யை புகழ்ந்து பேசினார்.


தனக்கே உரிய அடுக்குமொழியில் பேசினார் டி.ராஜேந்தர்.


விஜய்

விஜய்

டி. ராஜேந்தருக்கு முன்பு இயக்குனர்கள் தரணி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் விஜய்யை பாராட்டி பேசினார்கள். அப்பொழுது எல்லாம் விஜய் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.


டி.ஆர்.

டி.ஆர்.

டி. ராஜேந்தர் மேடையில் ஏறிய வேகத்தில் விஜய்யின் புகழ்பாடத் துவங்கிவிட்டார். மாலை வணக்கத்தையே, அமைந்தது நல்ல தலைவிதி அதனால் தான் நான் தமிழகத்தின் இளைய தளபதி என்று பெயர் எடுத்திருக்கும் இளைய தளபதியாய் இந்த ரசிக பட்டாளத்தின் அன்புக்குரிய அதிபதியாய் இருக்கக் கூடிய விஜய்யின் புலி திரைபடத்தின் இசை வெளியீ்ட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் மாலை நேர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என விரிவாக தெரிவித்தார்.


லைட்டா

லைட்டா

ராஜேந்தர் பேசத் துவங்கியதுமே விஜய் தனது இருக்கையில் லேசாக நெளிந்தார். பின்னர் அவர் புகழப் புகழ விஜய்யால் வெட்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.


புலி, புலி

புலி, புலி

நாட்டில் இருக்கலாம், காட்டில் இருக்கலாம் ஆயிரம் புலி ஆனால் இந்த புலி அட்மைர் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசத்தலான புலி, அசுர புலி, அசரா புலி, அற்புத புலி, அபூர்வ புலி என அடுக்கிக் கொண்டே போனார் டி.ஆர்.


ஓடி வந்த விஜய்

ஓடி வந்த விஜய்

புலி, புலி, புலின்னு டி. ராஜேந்தர் அடுக்கிக் கொண்டு போனதை பார்த்த விஜய் தனது இருக்கையில் இருந்து எழுந்து மேடைக்கு ஓடி வந்து அவரைப் பிடித்து பேச்சை நிறுத்த முயன்றார். ஆனால் டி.ராஜேந்தரோ தொடர்ந்து பேசினார்.


சால்வை

சால்வை

விஜய் ஒரு சால்வையை எடுத்து ராஜேந்தருக்கு போர்த்தி அவரது பேச்சை ஒரு வழியாக நிறுத்தினார். ராஜேந்தரோ அதே சால்வையை விஜய்க்கு போர்த்தி அழகு பார்த்தார்.


English summary
Vijay started blushing when T. Rajendar praised him to skies at the Puli audio launch. Vijay came to the stage to stop T. Rajendar's speech.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil