»   »  வருவானா, அவன் வருவானா?: சூர்யாவுக்காக நள்ளிரவு வரை காத்திருந்த விஜய்

வருவானா, அவன் வருவானா?: சூர்யாவுக்காக நள்ளிரவு வரை காத்திருந்த விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைய தளபதி விஜய் தனது பிறந்தநாள் அன்று தன் நண்பன் சூர்யாவுக்காக நள்ளிரவு வரை காத்திருந்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக நடித்துள்ள மாஸ் என்கிற மாசிலாமணி படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. கோலிவுட் ரசிகர்களை பேய் மோகம் பிடித்து இருப்பதால் மாஸ் படம் ஹிட் என்று தற்போதே பலர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.

படம் சூப்பராக வந்துள்ளது என்று வெங்கட் பிரபுவும் மகிழ்ச்சியில் உள்ளார்.

சூர்யா

சூர்யா

சூர்யாவும், விஜய்யும் சென்னை லயோலா கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். சொல்லப் போனால் சூர்யா நடித்த முதல்படமான நேருக்கு நேரில் விஜய்யும் நடித்திருந்தார். அடுத்து பிரெண்ட்ஸ் படத்தில் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடித்தனர்.

விஜய்

விஜய்

அண்மையில் அளித்த பேட்டியின்போது சூர்யா தனது நண்பன் விஜய் தன் மீது வைத்துள்ள பாசம் பற்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் தனது பிறந்தநாள் அன்று நண்பர்களுக்கு பார்ட்டி அளித்துள்ளார்.

வா நண்பா

வா நண்பா

விஜய் என்னை தொடர்பு கொண்டு தனது வீ்ட்டில் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார். நான் மும்பையில் இருக்கிறேன், சென்னை வர இரவு 11 மணி ஆகிவிடுமே என்றேன். அதற்கு அவரோ, நள்ளிரவு வரை பார்ட்டி நடக்கும், நீ வா பார்த்துக்கொள்ளலாம் என்றார் என சூர்யா தெரிவித்துள்ளார்.

காத்திருப்பு

காத்திருப்பு

சென்னைக்கு வந்த நான் நேராக விஜய்யின் வீட்டிற்கு சென்றேன். அங்கு பார்த்தால் விஜய் மற்றும் அனைவரும் எனக்காக காத்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என நெகிழ்ந்துள்ளார் சூர்யா.

படங்கள்

படங்கள்

நான் நடிக்கும் படங்கள் பற்றி விஜய்யிடம் கருத்து கேட்பேன். அவரும் தன்னுடைய படங்கள் பற்றி என்னுடைய கருத்தை கேட்பார். அவர் ஒரு படத்தில் நடித்த முடித்த பிறகு அதை பார்க்க வருமாறு எனக்கு அழைப்பு விடுப்பார் என்று சூர்யா கூறியுள்ளார்.

English summary
Suriya told that his friend Ilayathalapathy Vijay waited for him till midnight on his last birthday.
Please Wait while comments are loading...