»   »  நான் யாரு அஜீத்தை தூக்கிவிட?: சிம்பு

நான் யாரு அஜீத்தை தூக்கிவிட?: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் யாரு அஜீத்தை தூக்கிவிடுவதற்கு. அவரது உழைப்பு தான் அவரை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என சிம்பு தெரிவித்துள்ளார்.

தனது படங்களில் தல ரெபரென்ஸ் இனி இருக்காது என சிம்பு தெரிவித்ததை சில ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டனர். இதையடுத்து சிம்பு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

தல

தல

தல பற்றி நான் கூறியதை தப்பாக புரிந்து கொண்டார்கள். சிலம்பாட்டாம், மன்மதன் உள்ளிட்ட என் படங்களில் தலயின் வசனமோ, காட்சியோ ஏதாவது ஒன்னு வரும்.

கேள்வி

கேள்வி

நான் தல ரெபரென்ஸ் செய்தபோது எனக்கு தெரிந்து யாரும் கேள்வி கூட கேட்டது இல்லை. இப்பொழுது தல ஒரு பெரிய அந்தஸ்திற்கு போயிட்டார் என்பதால் நீங்க என்ன அவர் பெயரை யூஸ் பண்றீங்கன்னு கேட்கிறாங்க.

அப்படி இல்லை

அப்படி இல்லை

அடே காமெடிகளா, அப்படி இல்லை. நான் சொன்னதில் ஏதோ தப்பாக புரிந்து கொண்டார்கள். தல என்கிறவர் அஜீத் என்கிறவர் அந்த காலத்தில் இருந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தல தலன்னு

தல தலன்னு

அஜீத் அவருக்கு என ஒரு இடத்தை பிடித்தார். ஆனால் அப்போது யாரும் தல தலன்னு அவரை தூக்கி வைத்து கொண்டாடவில்லை. அந்த பீரியடில் தல பேரை சொல்லணும்னு நினைத்தேன்.

ரஜினி ரசிகன்

ரஜினி ரசிகன்

நான் சின்ன வயதில் இருந்து ரஜினி சார் ரசிகன். என்னோட தலைமுறையில் பார்த்தீங்கள் என்றால் அஜீத் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லோரும் ரஜினி சார் பெயரை சொல்றாங்க, அஜீத் சார் பெயரை சொல்ல வேண்டும் என என் படத்தில் அவருடைய கட்அவுட்டை வைத்து அவரைப் பற்றி பேசினேன்.

நான் தான்

நான் தான்

நான் என் படத்தில் தல ரெபரென்ஸ் வைத்ததை பார்த்து அஜீத்தும், ஷாலினியும் ரொம்ப ஃபீல் பண்ணினார்கள். நீங்க ஒரு நாள் பெரிய ஆளாக வருவீர்கள் என்று எனக்கு தெரியும் என அஜீத்திடம் கூறினேன். அன்னைக்கு அனைவரும் உங்கள் பெயரை சொல்வார்கள். அதை நான் முதலில் சொல்ல வேண்டும் என்பதால் இன்று சொன்னேன் என்றேன்.

நான் யாரு

நான் யாரு

அதற்காக அன்று அஜீத் ஒரு ஆளு இல்லை என்று கிடையாது. நான் யாரு அவரை தூக்கிவிடுவதற்கு. அவரது உழைப்பு தான் அவரை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அன்னைக்கு அவருக்கு தோள் கொடுத்து நின்றேன் என்பதால் தான் அந்த படத்தில் சீனை யூஸ் பண்ணி கத்தினேன்.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

இன்று தல தலன்னு அவர் பெயர் சொல்ல ஏராளமானோர் வந்துவிட்டார்கள். அதனால் அவரின் பெயரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நான் சொன்னதை நான் தான் தலயை தூக்கிவிட்டேன்னு தப்பாக புரிந்து கொண்டார்கள்.

English summary
Actor Simbu has clarified Thala fans about him saying that there won't be any Thala reference in his movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil