twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதா இருக்கும்போது நான் எதுவும் பேசவில்லை என்று யார் சொன்னது?: கமல்

    By Siva
    |

    சென்னை: ஜெயலலிதா இருக்கும்போது நான் எதுவும் பேசவில்லை என்று யார் சொன்னது என கமல் ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மனதில் படுவதை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார். அண்மை காலமாக அவர் ட்விட்டரில் அதிகம் அரசியல் பேசுகிறார் என்று ஆளாளுக்கு கூறுகிறார்கள்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    கமல் ட்விட்டரில் அரசியல் பேசினாலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரியவில்லை என்று பலரும் திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள். கொஞ்சம் புரியம்பட் ட்வீட்டுங்க ஆண்டவரே என்று பலரும் அவரை கேட்கிறார்கள்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இருக்கும் இடம் தெரியாமல் அடக்கிவாசித்த கமல் அவர் இறந்த பிறகு ட்விட்டரில் தில்லாக அரசியல் பேசுவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

    கமல்

    கமல்

    நெட்டிசன்களின் குற்றச்சாட்டு குறித்து கமல் கூறும்போது, ஜெயலலிதா இருக்கும்போது நான் பேசவில்லை என்று யார் சொன்னது. அரசுடன் போராடி வென்ற பிறகே விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்தோம் என்றார்.

    பிக் பாஸ்

    பிக் பாஸ்

    கமல் ஹாஸன் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியை தமிழில் நடத்த உள்ளார். இதற்காக ரூ. 1 கோடி செலவில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal Haasan said that he didn't keep quiet when former CM Jayalalithaa was alive. Netizens accuse him of talking about politics after Jaya's mystery death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X