twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெட்கி தலை குனிகிறேன்: கமல் ஹாஸனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆமீர் கான்

    By Siva
    |

    மும்பை: விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தபோது கமல் ஹாஸனுக்கு ஆதரவாக நிற்காததற்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    சென்சார் போர்டு படங்களில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை நீக்குமாறு கூறுவதற்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாலிவுட் படங்கள் பல சென்சார் போர்டில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    இந்நிலையில் இது குறித்து ஆமீர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தடை

    தடை

    படத்தில் எது தொடர்பாகவும் தடை விதிப்பதற்கு நான் எதிரானவன். மோசமான வார்த்தைகள் என்று தங்களிடம் எந்தவித பட்டியலும் இல்லை என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

    வார்த்தைகள்

    வார்த்தைகள்

    படத்தில் வரும் சில வார்த்தைகள், காட்சிகள் சரியில்லை என்று கூறி அதற்கு தடை விதிப்பது நியாயம் அல்ல.

    கமல் ஹாஸன்

    கமல் ஹாஸன்

    திரைத்துறையினர் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டிய நேரத்தில் நான் என் பட வேலையில் பிசியாக இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். கமல் சார், விஸ்வரூபம் பிரச்சனை நேரத்தில் நான் உங்களுடன் இல்லாமல் போனதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு தடை விதிப்பது சரி அல்ல.

    மாநில அரசு

    மாநில அரசு

    சென்சார் போர்டு சான்றிதழ் அளித்த பிறகு அந்த படத்தை மக்கள் அச்சமின்றி கண்டுகளிக்க மாநில அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு ஒரு படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் செய்வது சரி அல்ல என்று ஆமீப் தெரிவித்துள்ளார்.

    English summary
    Coming down heavily on the Censor Board, which recently stoked controversy by banning some objectionable words, actor Aamir Khan has said he is totally against banning any kind of material in media or films. He has appologised to Kamal Haasan for not beimg with him when he was struggling to release Vishwaroopam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X