ரஜினி, சிம்புக்கு இருக்கும் துணிச்சல் அஜித்துக்கு இல்லையா? வசூல் பாதிக்கும் என தள்ளிப் போனதா வலிமை?

சென்னை: தல அஜித்தின் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை வீழ்த்தும் என எதிர்பார்த்த தல ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் போனி கபூரின் இந்த பொங்கல் ரிலீஸ் அறிவிப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

கொரோனா முதல் அலைக்கு பிறகு மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை முதல் ஆளாக களமிறங்கி வரவழைத்தது.

நிச்சயம் தல அஜித்தின் வலிமை படம் ரிலீசானால் அதே நிலைமை உருவாகும் என எதிர்பார்த்த தியேட்டர் ஓனர்களுக்கும் இந்த அறிவிப்பு இந்த தீபாவளிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

தள்ளிப் போன தல படம்

தள்ளிப் போன தல படம்

இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் நிச்சயம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னமும் கொஞ்சம் பொறுமையாக இருங்க வலிமை படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் தான் ரிலீஸ் என அறிவித்து மீண்டும் தல ரசிகர்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

ரஜினி vs சிம்பு

ரஜினி vs சிம்பு

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பல மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு தற்போது தான் திறக்கப்பட்டு புதிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. வரும் தீபாவளிக்கு மீண்டும் திரையரங்குகளில் திருவிழா கொண்டாட்டங்களை நிகழ்த்த அண்ணாத்த மற்றும் மாநாடு ரெடியாகி விட்டன.

மக்களை வரவழைத்த மாஸ்டர்

மக்களை வரவழைத்த மாஸ்டர்

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் கூட்டம் வராமல் இருந்த நிலையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மீண்டும் மக்கள் கூட்டத்தை திரையரங்குக்கு வைத்தது மாஸ்டர் திரைப்படம் தான். தல அஜித்தின் வலிமை படம் இந்த ஆண்டே அதே மேஜிக்கை செய்யும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஏமாற்ற கொடுத்துள்ளதாக பலரும் புலம்பி வருகின்றனர்.

Recommended Video

Valimai Update | Yuvan Shankar Raja Interview | U1 Records | Tamil Filmibeat
அண்ணாத்த கையில் தான்

அண்ணாத்த கையில் தான்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த திரைப்படம் தான் வரும் தீபாவளிக்கு தியேட்டரில் மீண்டும் மக்களை வரவழைக்கும் வேலையை செய்யும் என தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

சிம்புவின் துணிச்சல்

சிம்புவின் துணிச்சல்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படமும் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்கிற துணிச்சலான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த இரு படங்களுடன் வலிமை போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலிமை வெளியீடு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளது.

தல தளபதி மோதல் இல்லை

தல தளபதி மோதல் இல்லை

வரும் பொங்கலுக்கு வலிமை தள்ளிப் போன நிலையில், தளபதி விஜய்யின் பீஸ்ட் உடன் அந்த படம் மோதப் போகிறது என ஏகப்பட்ட ரசிகர்கள் தல தளபதி மோதல் நடக்கப் போகிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டெல்லியில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்குத் தான் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சூர்யாவுடன் தான் கிளாஷ்

சூர்யாவுடன் தான் கிளாஷ்

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் போட்டியில் தல அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் தான் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளிப் போக காரணம்

தள்ளிப் போக காரணம்

ஒரு பக்கம் வசூல் பாதிக்கும் என்பது காரணமாக சொல்லப்பட்டாலும் மறு பக்கம் இயக்குநர்கள் சிறுத்தை சிவா மற்றும் வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பரான தல அஜித் இந்த தீபாவளி மோதலை வேண்டாம் என கூறி விட்டதால் தான் வலிமை படம் இந்த ஆண்டு வெளியாகாமல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எப்போ யார் படம் வந்தாலும், நல்லா இருந்தா நல்லாவே ஓடி ரசிகர்களை கொண்டாட வைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. வலிமை எப்போ வந்தாலும் வெல்லும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X