»   »  நடிக்க வரும் முன்பே மகன் துல்கருக்கு திருமணம் ஏன்?: ரகசியம் சொன்ன மம்மூட்டி

நடிக்க வரும் முன்பே மகன் துல்கருக்கு திருமணம் ஏன்?: ரகசியம் சொன்ன மம்மூட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடிக்க வரும் முன்பே இளம் வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்ததன் காரணத்தை மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் துல்கருக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். துல்கர் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து மம்மூட்டி மலையாள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

திருமணம்

திருமணம்

ஒரு மனிதனின் வாழ்வில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது திருமணம் தான். திருமணம் செய்து கொண்டால் பொறுப்பு ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேறத் தோன்றும்.

மம்மூட்டி

மம்மூட்டி

திருமணம் செய்து கொண்டதால் நான் அறிந்து கொண்டதை தான் மக்களுக்கு சொல்கிறேன். என் மகன் என் வழியை பின்பற்றுகிறார். அதனால் தான் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார் துல்கர்.

துல்கர்

துல்கர்

திருமணம் குறித்து நானும், என் மனைவியும் துல்கருடன் பேசினோம். அவரும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். அமல் சுபியாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றார் மம்மூட்டி.

பேத்தி

பேத்தி

துல்கர் சல்மானின் மனைவி அமல் சுபியா அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என்று பெயர் வைத்துள்ளனர்.

English summary
Dulquer Salmaan is a complete family man like his father, Mammootty. Dulquer entered the wedlock at a very young age, even before he made his acting debut with Srinath Rajendran's Second Show. In a recent interview given to a popular Malayalam media, Mammootty revealed why his son got married very early.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil