»   »  நான் ஏன் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்தேன் தெரியுமா?: சிம்பு

நான் ஏன் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்தேன் தெரியுமா?: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு தான் ஆதரவு தெரிவித்ததன் காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.

தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். அவர் அழுததை பற்றி அனைவரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தவர் சிம்பு.

சிம்பு ஆதரவு தெரிவித்த பிறகே மற்றவர்களும் சிவாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் என் நெருங்கிய நண்பர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்காக நான் பரிதாபப்படுகிறேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

வாலு

வாலு

வாலு படம் ரிலீஸான போதும் சரி, அண்மையில் ஏற்பட்ட பீப் பாடல் சர்ச்சையின் போதும் சரி நானும் சிவகார்த்திகேயன் போன்றே கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார் சிம்பு.

திரையுலகினர்

திரையுலகினர்

நான் கஷ்டப்பட்டபோது திரையுலகை சேர்ந்த ஒருத்தரும் ஆதரவாக வரவில்லை. ஏன் என்னுடைய நண்பர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட எனக்காக ஆதரவாக பேசவில்லை என்று வருத்தப்படுகிறார் சிம்பு.

சிம்பு

சிம்பு

நான் பிரச்சனைகளை சந்தித்தபோது யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே நிலை சிவகார்த்திகேயனுக்கு வரக் கூடாது என்று தான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன் என்று சிம்பு கூறியுள்ளார்.

English summary
Simbu supported Sivakarthikeyan as he also faced similar issues in the recent past and during the release of Vaalu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil