»   »  விரைவில் டும் டும் டும்: காஞ்சி காமாட்சிக்கு மாங்கல்ய பூஜை செய்த விஷால்

விரைவில் டும் டும் டும்: காஞ்சி காமாட்சிக்கு மாங்கல்ய பூஜை செய்த விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால் திடீர் என தனது பெற்றோருடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

துப்பறிவாளன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஷால் வியாழக்கிழமை தனது பெற்றோருடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி தான் கோவிலுக்கு செல்வதாக கூறப்பட்டது.

உண்மையில் அவர் கோவிலுக்கு சென்றதற்கு வேறு காரணம் உள்ளது.

கோவில்

கோவில்

காலை 9.30 மணிக்கு கோவிலுக்குள் நுழைந்த விஷால் 12 மணிக்கு மேல் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் தனது பெற்றோருடன் சேர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தியதுடன் மாங்கல்ய பூஜையும் நடத்தி பிரார்த்தனை செய்தார்.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றால் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக விஷால் வேண்டிக் கொண்டாராம். ஆனால் அவர் கோவிலுக்கு வந்ததன் நோக்கம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

திருமணம்

திருமணம்

விஷாலுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் அவர் மாங்கல்ய பூஜை நடத்தியுள்ளார். அவரது தங்கைக்கு விரைவில் திருமணமாம். திருமணம் நல்லபடியாக நடக்கவே விஷால் மாங்கல்ய பூஜை செய்தாராம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. அம்மன் முன்பு இருந்து அபிஷேகத்தை பார்த்து மகிழ்ந்தேன். முதல்வர் குணமடைந்து விரைவில் பணிகளை தொடர வேண்டும். நடிகர்களுக்கு நல்லது செய்ய பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

English summary
Actor Vishal visited Kanchi Kamatchi Amman temple on thursday ahead of a wedding in his house.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil