»   »  ஆமா, நான் நயன்தாராவோட பேசினால் மத்தவங்களுக்கு என்னவாம்?: ஆர்யா

ஆமா, நான் நயன்தாராவோட பேசினால் மத்தவங்களுக்கு என்னவாம்?: ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் நயன்தாரவுடன் பேசினால் மற்றவர்கள் என்ன வந்தது என்று நடிகர் ஆர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்யா என்ற பெயரைக் கேட்டால் பலருக்கு பிக்கப் டிராப் நினைவுக்கு வரும் அளவுக்கு அவர் மீது கடுப்பில் உள்ளார்கள். ஏனென்றால் அனைத்து நடிகைகளும் படப்பிடிப்பில் ஆர்யாவுடன் ஜாலியாக பேசுவது, பழகுவது தான்.

இது குறித்து ஆர்யா முன்னணி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

கிசுகிசு

கிசுகிசு

நான் சினிமா துறையில் இருப்பதால் நடிகைகளுடன் தான் பேச முடியும். நான் நல்ல எண்ணத்தில் பழகுவதால் நடிகைகளும் என்னுடன் நட்பாக உள்ளனர். இதை பார்ப்பவர்களுக்கு அது கிசிகிசு ஆகிவிடுகிறது.

ஜாலி

ஜாலி

நான் 2005ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்துள்ளது சாதாரண விஷயம் அல்ல. என் படத்தில் மெசேஜை அல்ல ஜாலியை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் வருகிறார்கள். ஆர்யா படத்தை பார்த்தால் ஜாலியாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சித்து வருகிறேன்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா என் தோழி. அன்பாக பழகுவது, நட்புக்கு மரியாதை அளிப்பது ஆகியவற்றில் அவரை அடித்துக் கொள்ள முடியாது. நான் அவருடன் பேசினால் மற்றவர்களுக்கு என்ன வந்ததாம். எனக்கும் அவருக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை.

பிடித்த நடிகை

பிடித்த நடிகை

நான் யார் பெயரையும் கூற மாட்டேன். சினிமாவில் வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்லை. அதனால் யார் பெயரையும் தெரிவிக்க விரும்பவில்லை. வேறு ஏதாவது கேளுங்களேன் என்றார்.

English summary
Arya has questioned as to why his friendship with Nayanthara is bothering others.
Please Wait while comments are loading...