»   »  ரஜினி அமெரிக்காவில் தங்கியிருப்பது எதற்காக?

ரஜினி அமெரிக்காவில் தங்கியிருப்பது எதற்காக?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி ரிலீஸுக்குப் பிறகுதான் அமெரிக்காவிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

இரு வாரங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். கோடை விடுமுறையைக் கழிக்க அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

Why Rajini staying in US?

பொதுவாக வெளிநாடுகளில் அதிக நாட்கள் தங்கியிருக்க மாட்டார் ரஜினி. இந்த முறை இரு வாரங்களுக்கு மேல் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் சில நாளிதழ்களில் ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததால், அவர் அமெரிக்காவில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் என்று செய்தி வெளியாகியிருந்தது.

Why Rajini staying in US?

இதுகுறித்து நாம் விசாரிக்கையில், "உங்களையும் எங்களையும் போலவே நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் ரஜினி சார். அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, இப்போது நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம் தொடர்பாகவும்தான். இது தொழில் நிமித்தமான பயணம். அதற்கு மேல் சொல்ல முடியாது.

கபாலி வெளியான பிறகு ரஜினி சென்னை திரும்புகிறார்," என்றனர் ரஜினி தரப்பில்.

English summary
Sources say that Rajinikanth will staying in the US for two months for his upcoming project 2.O.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil