»   »  ஊரே பாதிப்பிலிருக்கும்போது நான் மட்டும் படத்தைப் பத்தி பேசினா நல்லாவா இருக்கும்?- சூர்யா

ஊரே பாதிப்பிலிருக்கும்போது நான் மட்டும் படத்தைப் பத்தி பேசினா நல்லாவா இருக்கும்?- சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊரே வெள்ள பாதிப்பிலிருந்ததால் தனது பசங்க 2 படத்தைப் பற்றி மீடியாவில் எதுவும் பேசாமல் தவிர்த்துவிட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்தார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் பசங்க 2. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பங்கேற்றார்.


பசங்க 2

பசங்க 2

அவர் பேசுகையில், "சென்னையில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டு அதற்கான நிவாரண வேலைகளும் நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே பசங்க 2 படத்தின் வேலைகளும் நடந்தன.


ஏன் பேசவில்லை

ஏன் பேசவில்லை

நான் பசங்க 2 பற்றி அதிகம் பேசவில்லை என்று பலரும் சொன்னார்கள். அதற்குக் காரணம், ஊரே பாதிப்பில் இருக்கும்போது படத்தைப் பற்றி நாம் பேசுவது சரியாக இருக்குமா?


இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிக்கிறோம் என்பதால் பட வெளியீட்டை உறுதி செய்திருக்கிறோம்.நல்ல கதை

நல்ல கதை

படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது எது மாதிரிப் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதுமாதிரியே இந்தப் படத்தின் கதை இருந்தது.


பாண்டிராஜ்

பாண்டிராஜ்

ஏற்கெனவே பசங்க என்கிற படத்தை எடுத்து தேசிய விருது வாங்கிய பாண்டிராஜ் இந்தப் படத்தை எங்களோடு இணைந்து உருவாக்க ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.


குழந்தைகளுக்கான படம்

குழந்தைகளுக்கான படம்

இந்தப் படம் குழந்தைகளுக்கான படம். குழந்தைகளைப் படத்துக்குக் கூட்டிப் போவதென்றால் அனிமேஷன் படங்கள் மட்டுமே இருக்கின்றன. பலவருடங்களுக்குப் பிறகு தங்க மீன்கள், காக்காமுட்டை போன்ற படங்கள் வந்தன. எனவேதான் இந்தப் படத்தைத் தயாரித்தோம்," என்றார்.


English summary
Surya says that he was not talking anything about Pasanga 2 because of Chennai floods.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil