»   »  இப்படி எல்லாம் இருந்தால் அஜீத்தை யாருக்கு தான் பிடிக்காது!

இப்படி எல்லாம் இருந்தால் அஜீத்தை யாருக்கு தான் பிடிக்காது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தை அனைவரும் கொண்டாட பல காரணங்கள் உள்ளது.

ஒரு காலத்தில் அஜீத்தை அவரது ரசிகர்கள் மட்டும் தான் தல, தல என தலையில் வைத்து கொண்டாடினர். ஆனால் தற்போதோ திரை உலகினர், பிற நடிகர்களின் ரசிகர்களுக்கு கூட தல மீது தனி மரியாதையும், அன்பும் உள்ளது.

இப்படி அனைவருக்கும் அஜீத்தை பிடித்துப் போக காரணம் இல்லாமல் இல்லை. அவற்றில் திரை உலகினரே வியந்து சொல்லும் சில காரணங்கள் இதோ,

படப்பிடிப்பு தளம்

படப்பிடிப்பு தளம்

அஜீத், தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் அன்பாக பழகுவார்.

விருந்தாளிகள்

விருந்தாளிகள்

அஜீத் தனது வீட்டுக்கு யார் வந்தாலும் தனது கையால் தான் காபி கொடுப்பார். வீட்டுக்கு வந்தவர்களுக்கு முதலில் சாப்பிட ஏதாவது கொடுத்துவிட்டு தான் பேசுவார்.

வாசல் வரை

வாசல் வரை

அஜீத் தனது வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை நன்கு உபசரித்து அவர்கள் கிளம்பும்போது வாசல் வரை வந்து வழியனுப்பி வைப்பார்.

வேலையாட்கள்

வேலையாட்கள்

அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர்களிடம் அன்புடன் நடந்து கொள்வார். அவர்கள் தங்க வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்து வேலைக்கு வந்து செல்ல வாகன வசதி செய்து கொடுத்துள்ளார்.

ஊக்குவிப்பு

ஊக்குவிப்பு

சக நடிகர், நடிகைகளை ஊக்குவிக்க தவறாதவர் அஜீத். அதே போன்று யார் சிறப்பாக நடித்தாலும் அவர்களை அவர் பாராட்ட மறப்பதும் இல்லை.

அடக்கம்

அடக்கம்

அடக்கம், அன்புடன் நடந்து கொள்வது, தான் ஒரு சினிமா நடிகன் என்ற பந்தா இல்லாமல் பொதுமக்களில் ஒருவராகவே நடந்து கொள்வது... இப்படி எல்லாம் இருந்தால் ஒரு பெரிய நடிகரை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்!

English summary
So what makes Thala Ajith so special that he is loved by each and every one especially within the film fraternity? Well lots of stories regarding Ajith's greatness have already been shared and it is not a secret anymore.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil