»   »  என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள்! - கமல்ஹாஸன்

என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள்! - கமல்ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலர் என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி, இலவசமாக ஏறி அடுத்த நிறுத்தத்துக்குப் போய்விடலாம் என நினைக்கிறார்கள் போலிருக்கிறது, என்றார் கமல் ஹாஸன்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

முகவரி - இடையூறு

முகவரி - இடையூறு

நான் ஒவ்வொரு படத்திலும் இடையூறுகளைச் சந்திக்கிறேன். என் முகவரியை கேட்டால் இடையூறு என்று சொல்லலாம். வீட்டு நம்பருடன் இடையூறு தெரு என்றுகூட போடலாம். அந்த அளவுக்கு எதிர்ப்புகளைச் சந்திக்கிறேன்.

தசாவதாரம் வழக்கு

தசாவதாரம் வழக்கு

‘தசாவதாரம்' படம் எடுத்தபோது ஒருவர் என்னுடைய கதை என்று வழக்குப் போட்டார்.

மும்பை எக்ஸ்பிரஸ்

மும்பை எக்ஸ்பிரஸ்

‘மும்பை எக்ஸ்பிரஸ்' படம் எடுத்த போது அந்த பெயரை வைக்கக்கூடாது என்றனர். மும்பைக்கு எப்படி தமிழ் வார்த்தை கண்டுபிடிப்பது?

சண்டியர்

சண்டியர்

‘சண்டியர்' படத்தை எடுத்தபோது எதிர்த்தனர். அதன் பிறகு ‘சண்டியர்' என்ற பெயரிலேயே ஒரு படமும் தயாராகி வெளிவந்து விட்டது. ‘பாபநாசம்' படத்தை எதிர்த்தும் வழக்கு போட்டனர்.

நல்ல வண்டி

நல்ல வண்டி

என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

மருதநாயகம்

மருதநாயகம்

மருதநாயகம் படத்தை எடுக்க என் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். இது ஒரு உலகப் படம் என்று அவர்களுக்கு நினைவூட்டுகிறேன்..," என்றார்.

English summary
Kamal Hassan says that somebody have intentionally targeting him during his movie release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil