»   »  பெரிய ஹீரோயின்களை ஏன் வேணாம்னு சொல்றேன் தெரியுமா?- விஜய் ஆன்டனி

பெரிய ஹீரோயின்களை ஏன் வேணாம்னு சொல்றேன் தெரியுமா?- விஜய் ஆன்டனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான்கு படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார் விஜய் ஆன்டனி. இவற்றில் இந்தியா பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்தும் ஹிட்தான்.

இந்த நான்கு படங்களிலுமே விஜய் ஆன்டனியுடன் ஜோடி போட்டவர்கள் புது நாயகிகள்தான். 'நான்'படத்தில் இவருக்கு ஜோடி ரூபா மஞ்சரி, 'சலீம்' படத்தில் அக்‌ஷரா பர்தன்ஷா, 'இந்தியா பாகிஸ்தான்' படத்தின்ஜோடி சுஷ்மாராஜ். தமிழ் தெலுங்கில் சக்கை போடு போட்ட "பிச்சைக்காரன்" படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர்ந்தவர் சாதனாடைடஸ்

Why Vijay Antony is avoiding top heroines?

ஒரு ஹிட் கொடுத்த சந்தானமே அடுத்து ஹன்சிகா ரெடியா... காஜல் ஜோடி போட வருவாங்களா? என்று கேட்கும் நிலையில், நான்கு படங்களின் வெற்றி நாயகன் விஜய் ஆன்டனியோ, எனக்கு பிரபல நடிகைகளே வேணாம்பா.. என்கிறார்.

Why Vijay Antony is avoiding top heroines?

ஏன் இந்த வெறுப்பு?

"முன்னணி நடிகைகள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கும் அளவுக்கு பெரிய பட்ஜெட் படங்களை நான் பண்ணுவதில்லை. அது மட்டுமல்ல எப்போதும் நான் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புவேன். புதுமுகங்கள் நடிக்கும் போது கால்ஷீட் பிரச்சினை இருக்காது. படத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடலாம்.

நான் கதைகளைத்தான் நம்புகிறேன். கதாநாயகிகளை அல்ல. படத்தின் பட்ஜெட் அனுமதித்து, முன்னணி ஹீரோயின்கள்தான் நடிக்க வேண்டும் என்ற தேவை வரும்போது பார்க்கலாம்," என்கிறார்.

English summary
Actor Vijay Antony says he wont book top heroines for his films due to their heavy payment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil