»   »  விஜய்யைச் சந்திப்பதைத் தவிர்த்த விஷால்!

விஜய்யைச் சந்திப்பதைத் தவிர்த்த விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொழில் ரீதியான மோதல் காரணமாக நடிகர் விஜய்யைச் சந்திப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் நடிகர் விஷால்.

நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான அணியும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.

இதில், விஷால் தலைமையிலான அணியில் நாசர், பொன்வண்ணன், கருணாஸ், கார்த்தி, உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ரஜினி, கமலை நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர்.

Why Vishal avoids to meet Vijay?

விஜய்யுடன் சந்திப்பு

அடுத்து நடிகர் விஜய்யையும் நேரில் சந்தித்து ஆதரவு கோர முடிவு செய்தனர். விஜய், சென்னைக்கு அருகே உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார் என்று தெரிந்ததும், அவரை நேரில் சந்திக்க விஷால் குழுவினர் முடிவு செய்தனர்.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

அதன்படி படப்பிடிப்பு தளம் நோக்கி விஷால் குழுவினர் சென்றனர். விஜய் படப்பிடிப்பு தளத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதி கிடையாது என்பதால், பத்திரிகையாளர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

விஷால் வரவில்லை

விஷால் குழுவினர் விஜய்யைச் சந்தித்து விட்டு, பத்திரிகையாளர்களிடம் விஜய்யிடம் தங்களது அணிக்கு ஆதரவு கோரினோம் என்று தெரிவித்தனர். விஜய்யுடனான சந்திப்பின்போது விஷால் கலந்துகொள்ளாதது குறித்து, விஷால் குழுவினரிடம் கேட்டபோது, விஷாலுக்கு அந்த நேரத்தில் 'பாயும் புலி' படத்தின் டப்பிங் பணிகள் இருந்ததால் விஜய்யை சந்திக்க அவரால் வரமுடியவில்லை என்று கூறினார்.

தவிர்ப்பு

ஆனால், உண்மையில், விஜய்யை சந்திக்க விஷால் வேண்டுமென்றே தவிர்த்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால், அண்மை காலமாக விஜய்யுக்கும், விஷாலுக்கும் தொழில்ரீதியாக போட்டி இருந்துகொண்டே இருக்கிறது.

மோதல்

கடந்த வருடம் விஜய்யின் 'கத்தி' படம் வெளிவந்தபோது விஷாலின் 'பூஜை' படம் அதற்கு போட்டியாக வந்தது. அதேபோல், சமீபத்தில் ஆகஸ்ட் 2-ந் தேதி விஜய்யின் ‘புலி' படத்தின் ஆடியோ வெளியானபோதுகூட, அதற்கு போட்டியாக விஷாலின் பாயும் புலி படத்தின் ஆடியோவும் வெளியிட்டதாக கூறப்பட்டது. புலி ரிலீசாகும் தேதியிலேயே பாயும் புலியும் வெளியாகிறது.

English summary
According to reports actor Vishal has avoided to meet Vijay and request him to support his team in Nadigar Sangam election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil