twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செய்வீங்களா ரசிகர்களே, அஜித் சொன்ன 6 விஷயத்தை செய்வீங்களா? #வாழுவாழவிடு

    By Siva
    |

    சென்னை: அஜித் படத்தில் ஒன்று நிஜத்தில் ஒன்று எல்லாம் பேசவில்லை. இரண்டிலும் வாழு வாழ விடு என்று தான் கூறுகிறார்.

    தமிழகத்தில் தாமரை மலர அஜித் ரசிகர்கள் உதவ வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இதையடுத்து தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் அஜித்.

    அஜித்தின் அறிக்கையை பார்த்த ரசிகர்கள் பாஜகவுக்கு ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

    அஜித்

    அஜித்

    தனது அறிக்கையில் வாழு வாழ விடு என்று அஜித் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை சிறப்பாக பார்த்துக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறார் அவர்.

    தெளிவு

    அரசியல் விஷயத்தில் அஜித் எப்பொழுதுமே தெளிவாகத் தான் உள்ளார். 2007ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியே அதற்கு சிறந்த உதாரணம்.

     உன் குடும்பம்

    உன் குடும்பம்

    உங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். வாழுங்கள் அதே சமயம் அடுத்தவர்களையும் வாழ விடுங்கள் என்று தான் அஜித் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இதனாலேயே #வாழுவாழவிடு என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

     கொண்டாடும்

    கொண்டாடும்

    எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம்-ஒழுங்கை மதித்து நடந்துகொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் இருப்பதும், மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு என்று அஜித் தெரிவித்துள்ளார். அஜித் சொன்னபடி நடந்தால் ஊர், உலகமே உங்களை கொண்டாடும். அவர் நம்மால் முடியாததை செய்யச் சொல்லவில்லை. அவருக்காக வாழுமாறும் கூறவில்லை.

    English summary
    Ajith has asked his fans to take care of them and thier families. His moto Live and let live is not only for his fans but also for everybody.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X