»   »  'இதற்குமேல் கடவுள் பார்த்துக் கொள்வார்' சிம்புவின் தெம்பான நம்பிக்கையிது

'இதற்குமேல் கடவுள் பார்த்துக் கொள்வார்' சிம்புவின் தெம்பான நம்பிக்கையிது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வார்" என்று பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியான பீப் பாடல் வழக்கில் தமிழகம் முழுவதும் சிம்புவிற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனிருத் கடந்த மாதம் காவல் நிலையம் சென்று நேரில் விளக்கமளித்தார்.

'Will Leave the Rest to God' says Simbu

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய நபரான சிம்பு இன்று காலை கோவை காட்டூர் காவல்நிலையம் சென்று நேரில் விளக்கமளித்திருக்கிறார்.

காவல் நிலையத்தில் விளக்கம் கொடுத்த பின்னர் நடிகர் சிம்பு அளித்த பேட்டியில் "காவல்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியிருக்கிறேன்.

என்மீது எந்தத் தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

English summary
Beep Song: After Police Inquiry Simbu Says "Will leave the rest to God".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil