»   »  பிறந்த நாள்... இந்த முறை வெளிப்படையாகக் கொண்டாடுவாரா விஜய்? ரசிகர்கள் ஆர்வம்!!

பிறந்த நாள்... இந்த முறை வெளிப்படையாகக் கொண்டாடுவாரா விஜய்? ரசிகர்கள் ஆர்வம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு வித்தியாசமான சூழலில் வருகிறது நடிகர் விஜய்யின் பிறந்த நாள். அவர் வெளிப்படையாகக் கொண்டாடுவாரா? அமைதி காப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிறது விஜய் தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடி.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

வழக்கமாக அவர் தனது ரசிகர் மன்றத்தினரையும் ரசிகர்களையும் சாலிகிராமத்தில் சந்திப்பார். ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்குவார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஜூன் 22ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்குவார்.

ரத்து

ரத்து

ஆனால் அரசியல் சூழல் காரணமாக அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் ரத்து செய்து, படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டார். அல்லது தனியாக மிகச் சிலருடன் மட்டும் கொண்டாடினார்.

தலைவா தந்த நெருக்கடி

தலைவா தந்த நெருக்கடி

குறிப்பாக தலைவா படத்தில் அவர் நடித்த பிறகு, அரசியல் ரீதியாக அவர் ஒரு வார்த்தைக் கூடப் பேசுவதைத் தவிர்த்துவிட்டார். இப்போது அந்த நெருக்கடி ஏதும் அவருக்கு இல்லை.

மீண்டும் அரசியல் பேச்சு

மீண்டும் அரசியல் பேச்சு

அதை குறிக்கும் வகையில் விஜய் சமீபத்தில் அரசி அரசியல் பேசினார். விவசாயிகள் நன்றாக இல்லை என்று வருத்தப்பட்டார். அவரது தந்தை எஸ்ஏசி இன்னும் ஒருபடி மேலே போய், 'இன்று தொண்டு செய்வர்கள் நாளை முதல்வராகலாம்' என்றார்.

கொண்டாட்டம் நடக்குமா?

கொண்டாட்டம் நடக்குமா?

இந்த நிலையில் நாளை ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருகிறது. அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். விஜய் வழக்கம்போல ரசிகர்களைச் சந்திப்பாரா என்ற கேள்வியுடன் காத்திருக்கின்றனர்.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

இன்னொரு பக்கம் தமிழகம், கேரளாவில் உள்ள தியேட்டர்கள் விஜய் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அவரது ஹிட்டடித்த பழைய படங்களைத் திரையிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

என்ன செய்யப் போகிறார் விஜய்... ?

English summary
Fans and theater owners are gearing up to celebrate Vijay's birthday on June 22nd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil