»   »  அரசியலில் நுழைவாரா விஜய்?

அரசியலில் நுழைவாரா விஜய்?

Subscribe to Oneindia Tamil
Vijay
நடிகர் விஜய் அரசியலில் நுழைவதை காலம்தான் முடிவு செய்யும் என்று அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய் நற்பணி மன்றம் சார்பில் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இயக்குனர் சந்திரசேகர் மாலையில் பரிசுகளை வழங்கினார். பின்னர் 2 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை அவர் வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த ஓட்டப் போட்டியில் முதலில் வேகமாக ஓடியவர்கள், தோல்வியை தழுவினர். ஆனால்
நிதானமாக ஓடியவர்கள் வெற்றி பெற்றனர். இது எல்லா செயலுக்கும் பொருத்தும்.

நான் மாவட்ட வாரியாக விஜய் ரசிகர்களை சந்தித்து வருகிறேன். பெரும்பாலான ரசிகர்கள் சினிமா பைத்தியங்களாக உள்ளனர்.

நடிகர், நடிகைகளுக்கு கட் அவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது, ரசிகர்களுக்குள் சண்டை போடுவது என உள்ளனர். போஸ்டர் ஒட்டுவது, விசில் அடிப்பது போன்றவற்றால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.

ரசிகர் மன்றத்தினர் சகோதர உணர்வோடும், சமுதாய சிந்தனையோடும், மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதற்காகவே நான் மாவட்டம் தோறும் சென்று ரசிகர் மன்றத்தினரை சந்தித்து வருகிறேன்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் நடிகர்களுக்கு இப்படி ஒரு கொடுப்பினை உள்ளது. நானோ அல்லது எனது மகனோ எந்த கட்சியிலும் இணையவில்லை. நாங்கள் அரசியலில் நுழைவோமா என்பதை காலம்தான்
முடிவு செய்யும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியல் உணர்வு எல்லோருக்கும் உண்டு என்றார் எஸ்.ஏ.சி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil