»   »  கோபத்தில் சொல்லிட்டேன், இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன்: கமல்

கோபத்தில் சொல்லிட்டேன், இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன்: கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட தொல்லைகளை நினைத்து கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றேன். ஆனால் நாட்டை விட்டு போக மாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் பத்திரிக்கையாளர்கள் மன்றம், செய்தியாளர்கள் சங்கம் ஆகிவற்றின் சார்பில் பெங்களூரில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கமல் ஹாஸன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

ரமேஷ் அரவிந்த் படத்தில்

ரமேஷ் அரவிந்த் படத்தில்

எனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகத்தில் நடக்கும். தமிழ் படங்கள் கர்நாடகத்தில் படமாக்கப்படும் சூழல் உருவாக வேண்டும் என்றார் கமல்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட் என்பது மும்பை திரைப்பட துறையை குறிக்கும் சொல். அதை வைத்து இந்திய திரைப்படத் துறையை அழைப்பதை நான் ஏற்க மாட்டேன். இந்தியாவில் எடுக்கப்படும் படங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட படங்கள் தென்னிந்தியாவில் தான் எடுக்கப்படுகின்றன என்று கமல் தெரிவித்தார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட் என்பது சிறிய கிராமம் ஆகும். இருப்பினும் அது உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. நாமும் முயற்சி செய்தால் ஹாலிவுட்டை இந்தியாவுக்கு மாற்றலாம்.

நாட்டை விட்டு

நாட்டை விட்டு

விஸ்வரூபம் படத்தை வெளியிடுவது தொடர்பாக தொல்லைகள் ஏற்பட்டதால் கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று கூறினேன். அவ்வாறு நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கமல் கூறினார்.

எல்லோரும் அரசியல்வாதிகள்

எல்லோரும் அரசியல்வாதிகள்

ஒரு வகையில் பார்த்தால் அனைவருமே அரசியல்வாதிகளே. வாக்களிக்க மட்டும் தான் கை விரலில் மை வைத்துக் கொள்வேன். அரசியல் கறையை கை முழுவதும் பூச விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது என்றார் கமல்.

காந்தி

காந்தி

எப்படி உங்களுக்கு எல்லாம் ரஜினியையும், கமலையும் பிடிக்கிறதோ அதே போன்று மகாத்மா காந்தியையும், பெரியாரையும் எனக்கு பிடிக்கும். எனக்கு பிடித்த தலைவர் காந்தியடிகள். அவரின் அஹிம்சை கொள்கை என்னை கவர்ந்தது ஆகும் என்று கமல் கூறினார்.

பெரியார்

பெரியார்

ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்தை தட்டி எழுப்பிய சமூகப் போராளி பெரியார். அதனால் அவரை பிடிக்கும். பெரியாரும், ராமானுஜரும் வேறு வேறு அல்ல. கடவுள் பற்றிய அவர்களின் கருத்துகள் வேறுபட்டிருப்பினும் அவர்களின் நோக்கம், பணி, இலக்கு ஒன்றாக தான் இருந்தன என்று கமல் தெரிவித்தார்.

English summary
Kamal Hassan told that he won't leave India as he said so in anger after trouble mounted in releasing Vishwaroopam.
Please Wait while comments are loading...