»   »  மதன்களின் படங்களில் நடிக்க மாட்டேன், சட்டப்படி சந்திக்க ரெடி: சிவகார்த்திகேயன் அதிரடி

மதன்களின் படங்களில் நடிக்க மாட்டேன், சட்டப்படி சந்திக்க ரெடி: சிவகார்த்திகேயன் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவீஸ் மதனிடம் முன்பணம் வாங்கவில்லை. அதனால் அவர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவீஸ் மதனிடம் புது படங்களுக்காக முன்பணம் வாங்கவில்லை என்று சிவகார்த்திகேயன் கூறி வருகிறார். ஆனால் அவர்களோ சிவாவுக்கு பணம் கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சிவா நடிகர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

ஞானவேல்ராஜா

ஞானவேல்ராஜா

என்னிடம் கால்ஷீட் கேட்டு 2013-ல் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய 3 பேர் அணுகினார்கள். இதில் ஞானவேல்ராஜா படத்தில் நடிப்பதற்கு மட்டும் ஒப்பந்தம் போடப்பட்டது.

மதன்கள்

மதன்கள்

மற்ற இருவரின் படங்களில் நடிக்க வாய்மொழியாகவே பேசப்பட்டது. இதற்காக அவர்களிடம் சம்பளத்துக்கான முன்பணம் எதுவும் நான் வாங்கவில்லை.

நடிப்பேன்

நடிப்பேன்

இப்போது எனது மார்க்கெட் நிலவரம் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் மூன்று பேரும் வந்து தங்கள் படங்களில் நடித்துக் கொடுக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஞானவேல்ராஜாவிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதால் அவர் படத்தில் நடித்துக் கொடுப்பேன்.

முடியாது

முடியாது

மற்ற இருவரின் படங்களிலும் நடிக்க முடியாது. அவர்களிடம் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன்.

English summary
Sivakarthikeyan has sent a letter to Nadigar Sangam saying that he hasn't got token advance from Madhans and wont act in their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil