வீட்டில் சந்தித்து எழுத்தாளர் வைத்த கோரிக்கை.. உடனே ரஜினி செய்த சம்பவம்.. ச்ச என்னா மனுஷன்யா!

சென்னை: ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து இந்த வருடத்தோடு 50 வருடங்கள் நிறைவடைகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. அடுத்ததாக அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படமாவது கூலி போன்று ரிசல்ட்டை பெறாமல் இருக்க வேண்டும் என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ரஜினிகாந்த் என்றாலே பெரிய அறிமுகம் தேவையில்லை. அவரது பெயரே கடந்த 50 வருடங்களாக இந்திய திரையுலகில் ஒரு பிராண்டாக மாறியிருக்கிறது. அவர் நின்றால், நடந்தால், பேசினால், சிரித்தால் கொண்டாடுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அதன் காரணமாகத்தான் இத்தனை வருடங்கள் ஆகியும் சூப்பர் ஸ்டார் நாற்காலியிலிருந்து அவரை இறக்க முடியவில்லை. தோல்வி படங்களை கொடுத்தாலும் அடுத்தடுத்த படங்களில் வீரியமிக்கவராகவே இதுவரை எழுந்திருக்கிறார் என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான்.

கூலி வாங்கிய அடி: தர்பார், அண்ணாத்த தோல்வியடைந்தபோது ரஜினி இனி அவ்வளவுதான் என்று கூறினார்கள். ஆனால் ஜெயிலர் படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க கூலி படம் மோசமான விமர்சனத்தைத்தான் சந்தித்திருக்கிறது. அதனால் இனி ரஜினி அவ்வளவுதான் என பலரும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் கண்டிப்பாக ஜெயிலர் 2வில் அவர் கம்பே கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் ரஜினி குறித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Writer Rajesh Kumar Shares His Memorable Experience of Meeting Rajinikanth at Home
Photo Credit:

ராஜேஷ் குமாரின் பதிவு: அவர் தனது முகநூல் பக்கத்தில், "1960 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இருந்து
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய்,அஜித் என்று எனக்கு எல்லோரையுமே பிடிக்கும். நான் என்றைக்குமே குறிப்பிட்ட திரைப்பட நட்சத்திரத்தோடு சேர்த்து ஒரு வட்டம் போட்டுக் கொண்டதில்லை. 1996 இல் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் சிறுகதைக் கதிர் என்கிற ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தார். பத்திரிகையின் ஆசிரியர் பெ.கருணாகரன். அந்தப் பத்திரிகையில் ரஜினி ராஜ்யம் என்கிற தலைப்பில் தொடர்கதை எழுத ஒப்புக் கொண்டேன். அந்தத் தொடரில் ரஜினிதான் ஹீரோ .

ஹீரோ ஆர்.கே: ஆர்.கே என்று அழைக்கப்படும் ஒரு கிரைம் பிராஞ்ச் ஆபீஸர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நகருக்கும் சென்று, அங்கே நடைபெறும் குற்றவியல் நிகழ்வுகளைத் தடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பவர். அந்தத் தொடர்கதை பத்திரிகையில் வெளியாகும்போது, விளம்பரம் செய்வதற்கு ரஜினியின் ஸ்டில்ஸ் தேவைப்பட்டதால் கதையை பற்றி அவரிடம் சொல்ல, வேண்டுமென்பதற்காக ரஜினியை ஒரு காலை வேளையில் போயஸ் கார்டன் வீட்டில் நக்கீரன் கோபாலுடன் சந்தித்தேன்.

கூட்டம் அலை மோதியாது: ரஜினியின் வீட்டுக்குள்ளும் சரி, வெளியேயும் சரி, அவரை பார்க்க வந்திருந்த கூட்டம் அலைமோதியது. ஒரு அறையில் பிரபல பட அதிபர்கள் அவருடைய கால்ஷிட்டுக்காக காத்திருந்தார்கள். அன்றைய ரசிக மன்றத் தலைவர் சத்தியநாராயணா எங்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஹாலில் அமர வைத்தார். அடுத்த ஐந்தாவது நிமிடம் ரஜினியை சந்தித்தேன். நான் எழுதிய என்னுடைய ஐந்து நாவல்களை அவரிடம் கொடுத்தேன். அவர் நன்றி சொல்லிக் கொண்டே என் தோள் மீது கையை வைத்தபடி தனது வழக்கமான மின்னல் வேகக் குரலில் பேசினார்.

படிக்க நேரமில்லை: "ராஜேஷ்குமார் நீங்க நிறைய எழுதறீங்க. நான் எல்லா புக்லேயும் உங்க பேரைப் பார்க்கிறேன் ஆனா எனக்கு படிக்க நேரமில்ல. வீட்ல படிப்பாங்க. இப்ப நான் உங்களுக்கு என்ன பண்ணனும்?" அவரை ஹீரோவாக வைத்து நான் எழுதப்போகிற தொடர்கதையைப் பற்றிச் சொல்லி, விளம்பரத்துக்காக வித்தியாசமான கெட்டப்பில் அவருடைய போட்டோக்கள் வேண்டுமென்றேன்.

ரஜினி செய்தது: அவர் தலையை உயர்த்தி அண்ணாந்து "ஹாஹாஹா" என்று சிரித்தபடி " இது நல்லாயிருக்கா" என்று சொல்லி மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். பிஸியான அந்தக் காலை வேலையிலும் ரஜினி எனக்காக நேரம் ஒதுக்கி என்னோடு அரைமணிநேரம் பேசிக் கொண்டிருந்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். இன்றைக்கும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.முன்னதாக, ராஜேஷ்குமார் தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான க்ரைம் எழுத்தாளர் ஆவார். அவரது கதையை பாலுமகேந்திரா உள்ளிட்டோர் திரைப்படமாக எடுக்க ரொம்பவே விரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X