»   »  அடடா "வட" போச்சே... சோகத்தில் ஜீவா.. காரணம் தனுஷ்?

அடடா "வட" போச்சே... சோகத்தில் ஜீவா.. காரணம் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னை படத்தில் நான் நடிக்கிறேனா? என்று நீங்கள் தனுஷிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று நடிகர் ஜீவா பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ஜீவாவும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

You Ask Dhanush about Vetri Maran's Vada Chennai- Jeeva

ஆனால் தான் அடுத்து கவுதம் மேனனின் படத்தில் நடிக்கவிருப்பதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சமீபத்தில் வடசென்னை படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று ஜீவாவிடம் கேட்டனர்.

அதற்கு ஜீவா "வடசென்னை படத்தில் நடிக்க என்னிடம் தேதிகள் கேட்டது உண்மைதான். ஆனால் அந்தப்படம் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது.

தனுஷ் அந்தப்படத்தில் நடிக்காமல் தள்ளி வைத்தபிறகு நான் அதைப் பற்றி என்ன சொல்வது. நான் ஏன் நடிக்க மறுத்தேன் என்பதைவிட நீங்கள் தனுஷிடம் வட சென்னை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.

இதனால் ஜீவா மற்றும் தனுஷுக்கு இடையில் மோதல் உருவாகியிருப்பதாக கோலிவுட் வட்டராங்கள் கிசுகிசுக்கின்றன.

English summary
Vada Chennai:"I am a Part of this Film or Not, Better you should ask Dhanush" Jeeva says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil