»   »  'பிகினி'க்கு ஸ்னேகா ஸாரி!

'பிகினி'க்கு ஸ்னேகா ஸாரி!

Subscribe to Oneindia Tamil
Sneha

எந்தக் காரணத்தைக் கொண்டும் நீச்சல் உடையில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் புன்னகை இளவரசி ஸ்னேகா.

குடும்பக் குத்துவிளக்கு நாயகியாக தமிழ் திரையுலகினரால் ஆராதிக்கப்படும் ஸ்னேகா தெலுங்கில் மட்டும் அவ்வப்போது கவர்ச்சியிலும் கலக்குவார். இப்போது தெலுங்குப் படங்களில் ஸ்னேகா படு பிசி.

தற்போது ஸ்னேகாவிடம் 2 தமிழ்ப் படங்களும் உள்ளன. மேலும் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கவர்ச்சியில் அத்தனை நாயகிகளும் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் மட்டும் இப்படி தனித் தீவாக இருப்பது ஏன் என்று ஸ்னேகாவிடம் கேட்டால், புதிதாக வரும் நடிகைகள் பலர் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டுகிறார்கள். கவர்ச்சியால் எளிதாக முன்னணிக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது தவறு.

வெற்றி பெறவும், முன்னணிக்கு வரவும் நடிப்புத் திறமைதான் முக்கியம். கிளாமர் நீண்ட நாட்களுக்கு கை கொடுக்காது.

நான் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு முழுக் கதையையும் கேட்பேன். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க கூடியதாக கதை இருந்தால்தான் ஒப்புக் கொள்வேன். முகம் சுளிக்கும் அளவுக்கு கதை இருந்தால் ஸாரி சொல்லி விடுவேன்.

அதேபோல எந்தக் காரணத்தைக் கொண்டும் நீச்சல் உடைக் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன். அது கதைக்கு தேவையோ, இல்லையோ எனக்குத் தேவையில்லை என்றார் ஸ்னேகா.

ஸ்னேகா சமீபத்தில்தான் சென்னையில் புது வீடு கட்டி குடியேறினார். சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பண்ருட்டியில், கல்யாண மண்டபம் கட்டினார். அடுத்து ஹைதராபாத்தில் ஒரு பங்களா வாங்கும் திட்டம் உள்ளதாம். தெலுங்குப் படங்களில் அதிகம் நடிப்பதால் ஹோட்டல்களில் தங்குவதை விட சொந்த வீடு இருந்தால் நலமாக இருக்கும் என நினைக்கிறாராம் ஸ்னேகா.

மொத்தத்தில் 'ஊடு' கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார் ஸ்னேகா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil