»   »  மீண்டும் தனுஷுடன் ஷ்ரியா!

மீண்டும் தனுஷுடன் ஷ்ரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shriya
ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது முதுமொழி. ஆனால் ஷ்ரியாவுக்கோ ஒரு கதவு மூடிய நிலையில் 2 கதவு திறந்துள்ளதாம்.

அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறி போனதால் கவலையில் இருந்த ஷ்ரியாவுக்கு தனுஷுடன் இரண்டு படங்களில் ஜோடி சேரும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

இந்த ஆண்டின் தொடக்கம் ஷ்ரியாவுக்கு சிறப்பானதாக இல்லை. முதலில் அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து போய் மீண்டும் வந்து இப்போது போயே போய் விட்டது. இடையில், சிவாஜி பட விழாவில் குண்டக்க மண்டக்க டிரஸ்ஸில் வந்து சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக மீண்டார்.

பிறகு, வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடி, ஹீரோக்கள் சிலரின் கடுப்பில் சிக்கினார். இதனால்தான் அஜீத் படமே அவரை விட்டுப் போனது.

இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட குழப்பங்களால் அப்செட் ஆகியிருந்த ஷ்ரியாவுக்கு சந்தோஷம் தரும் வகையில், தனுஷ் படம் வந்துள்ளது.

தனுஷுடன் இணைந்து ஷ்ரியா நடித்த திருவிளையாடல் ஆரம்பம் ஹிட் படம். இந்த நிலையில் மீண்டும் தனுஷுடன் இணையும் வாய்ப்பு வந்துள்ளதால் சந்தோஷமாகியுள்ளார் ஷ்ரியா.

திரையுலகில் பெருத்த பாரம்பரியத்தைக் கொண்ட ஜெமினி லேப்ஸ் நிறுவனம்தான் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறது.

லவ் டுடே, ஆர்யா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பாலசேகரன் இப்படத்தை இயக்கப் போகிறார். தெலுங்கில் வெளியான ஆர்யா என்ற சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்தான் இந்தப் புதிய படம்.

ஷ்ரியாவை ஜோடி சேர்க்க தனுஷ்தான் பரிந்துரைத்தாராம். இதையடுத்தே பாலசேகரன் ஷ்ரியாவை அணுகினாராம்.

இதற்கிடையே, பொல்லாதவன் படத்தை உருவாக்கிய க்ரூப் கம்பெனியின் தயாரிப்பில் இன்னொரு படம் உருவாகவுள்ளது. இதிலும் தனுஷ்தான் நாயகன். இப்படத்திலும், ஷ்ரியாதான் நாயகி என்றும் கூறப்படுகிறது.

மெய்யாலுமா என்று தனுஷிடம் கேட்டபோது, ஒண்ணும் முடிவாகலை தலைவா, ஆனாக்கா சொல்றேன் என்று கூறி நழுவினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil