»   »  மீண்டும் வருகிறார் கீரத்

மீண்டும் வருகிறார் கீரத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Keerath
வட்டாரம் படத்துடன் காணாமல் போன கீரத், மீண்டும் வருகிறார். இம்முறை நடிகை ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.

சரண் இயக்கத்தில் உருவான வட்டாரம் படத்தில் நாயகியாக நடித்தவர் கீரத். அதன் பின்னர் ஆளைக் காணவில்லை. இந்த நிலையில் மீண்டும் தமிழுக்குத் திரும்புகிறார்.

பல வெற்றிப் படங்களைக் கொடுத்த கோவைத் தம்பியின் மறு வருகைப் படத்தில்தான் கீரத் நாயகியாக நடிக்கவுள்ளார். இளையராஜாவுடன் இணைந்து பயணங்கள் முடிவதில்லை, இளமைக் காலங்கள், உதயகீதம் என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் கோவைத் தம்பி.

ஆனால் பல ஆண்டுகளாக கோவைத் தம்பி படத் தயாரிப்பில் ஈடுபபடவில்லை. இந்த ஆண்டு கோவைத்தம்பியின் மதர்லாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வெள்ளி விழா ஆண்டாகும். இதையடுத்து மீண்டும் படத் தயாரிப்புக்குத் திரும்ப கோவைத் தம்பி முடிவு செய்துள்ளார்.

மதர்லாண்ட் பிக்சர்ஸின் மறு வருகைப் படத்தை இளம் இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார். இவர் ஏற்கனவே சூர்யா, ஜோதிகா, பூமிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கியவர்.

இப்படத்தை கிருஷ்ணா ஆரம்பித்துள்ள ஒயிட் பீல்டு என்ற பட நிறுவனத்துடன் இணைந்து மதர்லாண்ட் தயாரிக்கிறது.

ரிச்சர்ட் நாயகனாக நடிக்கிறார். கீரத் ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக புதுமுகம் காயத்ரி நடிக்கவுள்ளார்.

இப்படத்துக்கு இசையமைப்பவர் புதுமுகம் சத்யா. படப்பிடிப்பு ஊட்டியில் பிப்ரவரி 6ம் தேதி தொடங்குகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil