»   »  ஐஸுக்கு ரூ. 6 கோடி சம்பளம்!

ஐஸுக்கு ரூ. 6 கோடி சம்பளம்!

Subscribe to Oneindia Tamil
Aishwary rai
ரஜினிகாந்த்தின் ரோபோட் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதன் மூலம் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக ஐஸ்வர்யா உருவெடுத்துள்ளார்.

ரூ. 120 கோடி முதல் ரூ. 140 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது ரோபோட். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. மே 2வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க பல தென்னிந்திய நடிகைகள் முயன்றனர். ஆனால் அதிர்ஷ்டம் ஐஸ்வர்யா பக்கம் இருந்தது.

ரஜினி படங்களில் நடிக்காமல் டபாய்த்து வந்த ஐஸ்வர்யா, படு கஷ்டப்பட்டு ரோபோட்டில் பேசி முடித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ரூ. 6 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாம். தற்போது அவர் பாலிவுட்டில் ரூ. 2 கோடியும், ஹாலிவுட் படமாக இருந்தால் ரூ. 4 கோடியும் சம்பளமாக பெறுகிறார். ஆனால் இந்த இரண்டையும் சேர்த்து ரோபோட்டில் வசூலித்துள்ளார்.

ரோபோட்டில் வாங்கப் போகும் இந்தப் பெரிய சம்பளத்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

கிராபிக்ஸுக்கு ரஜினி மகள் செளந்தர்யா

இதற்கிடையே, ரோபோட் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பார்க்கவுள்ளார். அவரது கிராபிக்ஸ் நிறுவனமான ஆக்கர் நிறுவனமே இப்பணிகளை பார்த்துக் கொள்ளும்.

படத்தின் முக்கிய கேரக்டரான ரோபோட் நாயான ஜீனோவை ஆக்கர் நிறுவனம்தான் வடிவமைக்கவுள்ளது.

படம் முழுக்க ரஜினியுடன் இந்த இயந்திர நாயும் உடன் வரும். எனவே இந்தப் படத்தில் நாயும் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகிக்கவுள்ளது.

80 பணியாளர்களைக் கொண்ட செளந்தர்யாவின் ஆக்கர் நிறுவனத்திடம் இயந்திர நாயை உருவாக்கும் பணிகளை ஒப்படைக்க இயக்குநர் ஷங்கர்தான் தீர்மானித்தாராம். 6 மாதத்திற்குள் இந்தப் பணி முடியும் எனத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil