'பாலிட்டிக்ஸ்' பண்ண ஹன்சிகா ஆசை!
தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துக் கொண்டே அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதி முடித்துள்ளார். இதையடுத்து இனி முழுநேரமும் சினிமாவில் கவனம் செலுத்தவிருக்கிறார்.
தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்து வருகிறார். அமர்க்களமான கவர்ச்சிக்குச் சொந்தக்காரியாக இருப்பதால் அம்மணிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் தனது அரசியல் ஆர்வம் குறித்து வாய் திறந்துள்ளார் ஹன்சிகா. அவர் கூறுகையில்,
நான் பட்டப்படிப்பை முடித்துவிட்டேன். இனி ஃபுல்டைம் சினிமா தான். தமிழ் மற்றும் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல கதாபாத்திரங்களைப் பார்த்து தான் தேர்வு செய்வேன்.
பொலிடிக்கல் சயின்ஸ் படித்துள்ளதால் எனக்கு அரசியல் ஆர்வம் உள்ளது. அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன். அதற்காக நான் அரசியலுக்கு வருவேனா என்று தற்போது சொல்ல முடியாது. எதிர் காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.
ஹன்சிகாவை அனைவரும் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். குஷ்பு நடிப்பில் பெயர் எடுத்த பிறகு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஹன்சிகாவும் குஷ்பு பாணியில் அரசியலி்ல் ஈடுபடுவார் போல் இருக்கிறது.
கருத்து சொல்வதிலும் குஷ்பு மாதிரியே ஹன்சிகாவும் கலக்குவாரா என்பது தெரியவில்லை...!!


Click it and Unblock the Notifications












