»   »  கோலிவுட்டுக்கு ஆசின் குட்பை!!

கோலிவுட்டுக்கு ஆசின் குட்பை!!

Subscribe to Oneindia Tamil
Asin
ஒரு வழியாக தனக்கு ஏற்றம் கொடுத்த கோலிவுட்டுக்கு டாடா காட்டி விட்டார் ஆசின். இனிமேல் புல் டைம் பாலிவுட்டில்தான் பாயப் போகிறாராம்.

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து இங்குள்ள டாப்பர்களுடன் மல்லுக் கட்டி மளார் என உச்சத்திற்குப் போனவர் ஆசின். அப்படியோ டோலிவுட்டிலும் லாலி பாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் அவரைத் தேடி பாலிவுட் வாய்ப்புகள் பாய்ந்தோடி வந்தன.

எந்த உட் பெட்டர் என்று யோசித்துப் பார்த்த ஆசின், அலேக்காக பாலிவுட்டுக்கு பச்சைக் கொடி காட்டி, சூட்டோடு சூடாக மும்பையில் பங்களா ஒன்றையும் வாங்கிப் போட்டு அங்கே பறந்தார்.

பாலிவுட்டுக்குப் போனாலும் தமிழிலும் நடிப்பேன் என்றுதான் கூறியிருந்தார். ஆனால் இப்போது நிரந்தரமாக பாலிவுட்டிலேயே ஒரு ஆட்டம் காட்ட முடிவு செய்து விட்டாராம் ஆசின்.

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனத்துடன் ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தில் சைன் செய்திருக்கிறாராம் ஆசின். இதற்காக அந்த கம்பெனி ஆசினுக்கு ரூ. 10 கோடி வரை அள்ளிக் கொடுத்திருக்கிறதாம்.

அந்த நிறுவனம் ஒரு செலபரட்டி மேனேஜ்மென்ட் நிறுவனமாம். இனிமேல் அந்த நிறுவனத்தின் திட்டமிடல்படிதான் ஆசின் நடக்க முடியுமாம். அவரது படங்கள், விளம்பரங்களுக்கான கால்ஷீட்களை அந்த நிறுவனம்தான் பார்த்துக் கொள்ளும். யாரும் இனிமேல் ஆசினை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. அந்த நிறுவனம் மூலமாகத்தான் போக முடியும்.

மேலும் ஆண்டுக்கு சில நாட்களை அந்த நிறுவனத்தின் 7 தயாரிப்புகள் மற்றும் 2 சர்வதேச தயாரிப்புகளுக்காக ஒதுக்கி விட வேண்டும். இதுபோக, தயாரிப்பாளர்களுடன் படம், சம்பளம் குறித்தும் அந்த நிறுவனம்தான் பேசி முடிவு செய்யுமாம்.

ஆசின் முதன் முதலில் நடித்துள்ள இந்தி கஜினி பிப்ரவரி கடைசி வாரத்தில் திரைக்கு வருகிதாம். இதையடுத்து 3 பெரிய நிறுவனங்கள் அவரைப் பிடிக்க அலை மோதுகின்றனவாம். இதையடுத்து அந்த மூன்று நிறுவனங்களையும் ஒப்பந்தம் செய்து விடுமாறு ஆசின் தனது புது நிறுவனத்திடம் அறிவுறுத்தியுள்ளாராம்.

ஆசின் எடுத்துள்ள இந்தப் புதிய நடவடிக்கையால் கமல்ஹாசனின் படத்தையே புதிய நிறுவனம் நிராகரித்து விட்டதாம். அது போக மேலும் 2 தமிழ் பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிவப்பைக் காட்டி விட்டதாம்.

எல்லாம் நேரம்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil