Don't Miss!
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
9ம் தேதி ஷ்ரேயா ரெட்டி கல்யாணம்

திமிரு படத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் படு அரக்கத்தனமாக நடித்து நடிகையானவர் ஷ்ரேயா ரெட்டி. அதற்கு முன்பு எஸ்.எஸ். டிவியில் கலக்கல் வீஜேவாக விளையாடிக் கொண்டிருந்தார் ரெட்டி.
திமிரு படத்தைத் தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம் ஆகிய படங்களிலும் பேசும்படியான கேரக்டர்களில் நடித்துக் கலக்கினார்.
இந்த நிலையில் அவருக்கும், விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. விக்ரம் கிருஷ்ணா, சில காலத்திற்கு முன்பு அஜய் என்கிற பெயரில் நடித்தவர். பூப்பறிக்க வருகிறோம் படம்தான் அவரது முதல் படம். அதில் அவருக்கு ஜோடி மாளவிகா.
விஷால் நடிக்க வந்த பின்னர் தயாரிப்பாளர் ஆனார் விக்ரம் கிருஷ்ணா. சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்களை இவர்தான் தயாரித்தார்.
ஷ்ரேயாவுக்கும், விக்ரம் கிருஷ்ணாவுக்கும் திருமணம் நடத்தி வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதையடுத்து திருமண நிச்சயதார்த்தம் நாளை நடக்கிறது.
இருவருக்கும் நாளை மறுதினம் (மார்ச்-9) சென்னையில் திருமணம் நடக்கிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ள இநத்திருமண நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக பிரபலங்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.
வாழ்த்துக்கள். விஷாலுக்கு எப்போ?