»   »  பாவனாவின் கேம்!

பாவனாவின் கேம்!

Subscribe to Oneindia Tamil
Bhavana
குடும்பக் குத்துவிளக்கு இமேஜிலிருந்து வெளியே வர முடிவு செய்துள்ள பாவனா அதற்கேற்றபடி தனது கேரக்டர்களுக்கு மெருகூட்ட ஆரம்பித்துள்ளார்.

பாவனா கைவசம் தற்போது ஜெயம்கொண்டான் என்ற படம் உள்ளது. இதில் வினய்யுடன் இணைந்து நடிக்கிறார்.

பல முன்னணி நடிகைகள் கிளாமர் கோதாவில் படு தீவிரமாக இறங்கியுள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது. இதனால் பாவனாவால் முன்பு போல ஸ்டிடெயாக இருக்க முடியவில்லை. எனவே அவரும் கிளாமர் பக்கம் கண் திருப்பியுள்ளார்.

ஜெயம்கொண்டான் படத்தில் வினய்க்கு ஜோடியாக நடிக்கும் பாவனா இப்படத்தில் கூடைப்பந்து வீராங்கனையாக வருகிறாராம்.

புதுமுகம் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஜெயம்கொண்டானில் பாவனா தவிர லேகா வாஷிங்டனும் இருக்கிறார். இவர் ஏற்கனவே சிம்புவின் கெட்டவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென லேகாவை சிம்புவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் படத்திலிருந்து லேகாவை தூக்கி விட்டனர்.

சரி பாவனாவுக்கு வருவோம். வழக்கமாக சுடிதார் அணிந்து கொண்டோ அல்லது புடவையிலோதான் வருவார் பாவனா. இதுவரை நடித்த எல்லாப் படங்களிலும் இதே கதைதான். அதேபோல பணக்காரப் பெண்ணாகத்தான் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.

இதனால் சாமானிய ரசிகர்கள் மத்தியில் பாவனா மீது ஒரு ஈர்ப்பு வரவில்லை. இதைத் துடைக்கும் வகையில்தான் ஜெயம்கொண்டானில் தனக்குக் கிடைத்த வித்தியாசமான வேடத்தை ஏற்றாராம்.

இப்படத்தில் கூடைப்பந்தாட்டா வீராங்கனையாக வருகிறார் பாவனா. காட்சிகளில் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பயிற்சியாளரை வைத்து 3 நாட்கள் பந்து போட்டு பயிற்சி பெற்றுக் கொண்டாராம் பாவனா.

முன்பு எப்படி பந்தை தூக்கி கூடையில் போடுவது, எப்படி பாஸ் செய்வது என்றெல்லாம் தெரியாமல் இருந்தார் பாவனா. ஆனால் இப்போதோ, டோர்னமென்ட்டுகளில் போய் ஆடும் அளவுக்கு தேறி விட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil