»   »  சாமியின் சிந்துசமவெளியை மறக்க விரும்புகிறேன்-அமலா

சாமியின் சிந்துசமவெளியை மறக்க விரும்புகிறேன்-அமலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் திடீர் ஸ்டாராக மாறியுள்ள கேரளத்து அமலா பால், தன்னை முதன் முதலில் பரபரப்பாக அடையாளம் காட்டிய சிந்துசமவெளி படத்தை மறக்க விரும்புகிறாராம்.

அமலா பால் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நாயகியாகியுள்ளார். விக்ரமுடன் ஜோடி போடுகிறார். அடுத்து ஆர்யாவுடன் இணையவுள்ளார். இதனால் படு குஷியாகியுள்ளார் அமலா. அதை விட முக்கியமாக ரஜினிகாந்த்திடமிருந்து தனக்கு வந்த வாழ்த்தும், பொக்கேவும் பொக்கிஷம் போல என்றும் பூரிப்புடன் கூறுகிறார் அமலா.

படு சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கும் அமலா, தனக்கு முதன் முதலில் பரபரப்பான அறிமுகத்தைக் கொடுத்த சிந்துசமவெளி படத்தை மறக்க விரும்புவதாக கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அதை மறக்கவே நினைக்கிறேன். வசனங்கள் புரியாத நேரத்தில் நானே அப்படி பேசியிருக்கேன். அந்தப் படத்தை நினைத்தால் என் மீது எனக்கே கோபம். சொந்த வாழ்க்கையில் எப்படியோ அப்படியேதான் சினிமாவிலும் இருக்கணும்னு சென்னை வந்தேன்.

இப்போது எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதிலேயே வாழ்ந்து விட முடிவு செய்துள்ளேன். இந்த நேரத்தில் சிந்துசமவெளியை நினைக்கக் கூட விரும்பவில்லை. ஆனாலும் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் சாமிக்கு நன்றி என்கிறார் அமலா.

கேரளாவிலிருந்து வந்த ஒரே வருடத்தில் தனக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்திருப்பது மிகப் பெரிய விஷயம் என்று கூறும் அமலா, இனிமேல் கதைகளை முழுமையாக கேட்டு நடிக்கப் போகிறாராம்.

தனக்கு ஏற்றத்தைக் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமனுக்கு நன்றி கூறும் அவர், தன்னைத் தேடி வரும் புதிய படங்களைத் தேர்வு செய்வதில் படு கவனமாக இருக்கிறாராம்.

ஏ.ஆர்.முருகதாஸ் சார் தயாரிக்க போகிற படத்துக்கு என்னை அழைத்து கதை சொன்னார். யாருக்கும் இவ்வளவு சீக்கிரம் கிடைக்காத வாய்ப்பு இது. ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.

விக்ரம் சார் படத்துக்கு பேசினாங்க. நான் விக்ரம் சாரின் பெரிய ரசிகை. சேது முதல் ராவணன் வரை எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். சினிமாவுக்கு வந்த பின் இந்த இந்த நடிகர்களுடன் ஜோடி சேரணும்னு ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன்.

அதில் விக்ரம் முக்கியமானவர். ஆர்யாவின் வேட்டை படத்தில் நடிக்கிறேன். லிங்குசாமி இயக்குகிறார். எல்லாமே நல்ல கதைகள். நிச்சயம் நன்றாக நடிப்பேன் என நம்பிக்கை இருக்கு என்றார் அமலா.

எர்ணாகுளத்தில் கல்லூரியில் படித்து வரும் இந்த கேரளத்து சிட்டு கல்லூரிக்கு லீவு போட்டு விட்டுத்தான் படப்பிடிப்புகளுக்கு வந்து போகிறாராம்.

English summary
Amala Paul of Myna fame set to steal the show in her forthcoming movies with Vikram and Arya. Amala is on cloud nine after Rajini greeted her for the acting in Myna. She still cherishes those happy moments. For Amala this is a historical one. Now she is taking care of selecting stories and interestingly, she wants to forget Sindhu Samaveli!
Please Wait while comments are loading...