»   »  ஆட்டத்தை நிறுத்தினார் விந்தியா

ஆட்டத்தை நிறுத்தினார் விந்தியா

Subscribe to Oneindia Tamil
Vindhya
திருமணம் செய்து கொள்ளப் போகும் சந்தோஷத்தில் இருக்கும் விந்தியா தன்னைத் தேடி வரும் கவர்ச்சி ஆட்ட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம்.

சங்கமம் மூலம் நடிகையானவர் விந்தியா. முதல் படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. படமும் நன்றாகப் போனது. ஆனாலும் அதன் பின்னர் விந்தியா வேகமாக பிக்கப் ஆகவில்லை.

ஓரிரு படங்களில் நாயகியாக நடித்த விந்தியா பின்னர் 2வது நாயகி ரேஞ்சுக்கு மாறினார். அப்படியும் கூட பெரிய அளவில் படங்கள் தேறவில்லை. ஒரு படத்தில் விவேகுக்கு ஜோடியாக கூட நடித்திருந்தார்.

இடையில் பெரிய தொய்வு காணப்பட்டது. இதனால் கவர்ச்சி ஆட்டத்திற்கு மாறினார் விந்தியா. கவர்ச்சி குத்தாட்டத்தில் கொஞ்ச காலம் ஓட்டியும் கூட பெரிய அளவில் பேசப்படவில்லை.

இந்த நிலையில் திடீரென அரசியல் பக்கமும் சாய்ந்து பார்த்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக சூறாவளிப் பிரசாரம் செய்து அசத்திய விந்தியா, அரசியலிலும் பெரிய ஆளாகப் பிரகாசிக்க முடியவில்லை.

இப்படி அடுத்தடுத்து தடங்கல் வந்த நிலையில், இடையில் கற்பழிப்பு முயற்சி சர்ச்சையிலும் சிக்கினார். அந்த வழக்கிலிருந்து ஒரு வழியாக சமீபத்தில்தான் மீண்டார்.

இப்படி தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்த விந்தியாவின் வாழ்க்கையில் ஒரு சுப திருப்பமாக திருமணம் நிச்சயமாகியுள்ளது. பானுப்பிரியாவின் தம்பியை மணக்கப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார். இதனால் தன்னைத் தேடி வரும் கவர்ச்சி ஆட்ட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம்.

இனிமேல் நடிப்பதே சந்தேகம். அதிலும் கவர்ச்சி ஆட்டமெல்லாம் ஆடவே முடியாது என்று கூறி வருகிற வாய்ப்புகளை அன்போடு திருப்பி அனுப்பி வருகிறாராம் விந்தியா.

தற்போது விந்தியா கையில் அழகு நிலையம் உள்பட 2 படங்கள் உள்ளன. இதில் அழகு நிலையம் படத்தில் விந்தியாவும், சொர்ணமால்யாவும் போட்டி நடனம் ஒன்றில் ஆடி அசத்தியுள்ளனராம். அனேகமாக இதுதான் விந்தியாவின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil