twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் பிறந்த நாள் கொண்டாடிய நமீதா!

    By Staff
    |

    Namitha
    தன் தாத்தாவின் விருப்பத்துக்கிணங்க, நான்கு ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தோடு இன்று பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தார் நடிகை நமீதா.

    தமிழ் சினிமாவின் கனவுக் கன்னி, கவர்ச்சிப் புயல் என ஒட்டு மொத்த பட்டங்களையும் (படங்களையும்!) குத்தகைக்கு எடுத்துக் கொண்ட நமீதாவுக்கு இன்று பிறந்தநாள்.

    இந்தப் பிறந்த நாளை தமிழகம் முழுவதிலும் உள்ள நமீதா ரசிகர் மன்றத்தினர் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சென்னையில் நமீதா ரசிகர் மன்றத் தலைவர் செல்வம் மற்றும் பிஆர்ஓ ஜான் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    கோடம்பாக்கத்தில் உள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, மதிய உணவு போட்டு, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் நமீதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    பாண்டிச்சேரியில் நமீதா ரசிகர் மன்றம் சார்பில் 7 ட்யூஷன் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வசதியற்ற மாணவ மாணவிகள் இலவசமாக ட்யூஷன் படிக்கலாம். இவர்களுக்கு தன்னார்வ அடிப்படையில் 7 ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருகிறார்கள். இவர்கள் அனைவரும் தனி வேனில் இன்று சென்னை வந்து நமீதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்றனர்.

    அதேபோல கோவை சோமையனூரில் அமைந்துள்ள நநீதா மாலை நேர ட்யூஷன் சென்டரில் படிக்கும் 76 குழந்தைகளுக்கு இலவச பாட- நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த மையத்துக்கு 3 கம்ப்யூட்டர்களையும் நமீதா சார்பில் வழங்கினர் செல்வம் மற்றும் பிஆர்ஓ ஜான் ஆகியோர்.

    மும்பையில் நமீதா...

    நமீதா இந்த முறை தனது குடும்பத்தினருடன் மும்பையில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    இதுகுறித்து மும்பையிலிருந்த அவர் தொலைபேசியில் கூறியதாவது:

    "நான் கடைசியாக என் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடியது 2005-ல்தான். அதன்பிறகு தொடர்சச்சியான படங்கள், ஷூட்டிங் காரணமாக படப்பிடிப்புகளிலேயே பிறந்த நாள் கொண்டாடி வந்தேன். என் தாத்தாவுக்கு என்மேல் அளவுகடந்த பாசம். இந்த முறை பிறந்த நாளுக்கு மும்பை வந்துவிட வேண்டும் என்று அவர் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

    அவர் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை. அதனால் மற்ற வேலைகளையெல்லாம் தள்ளிப் போட்டுவிட்டு, குடும்பத்துடன் கேக் வெட்டி இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தேன். இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷ நாளாக அமைந்து விட்டது.

    என்னுடைய இந்தப் பிறந்தநாளை சென்னையில் அர்த்தமுள்ளதாக நண்பர்களும் என் ரசிகர் மன்றத்தினரும் கொண்டாடியுள்ளனர். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என்னாலான உதவியை தொடர்ந்து செய்வேன். எனக்கு வாழ்த்துச் சொன்ன உள்ளங்களுக்கும், பிறந்த நாளைச் சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கும் என் நன்றி," என்றார் நமீதா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X