»   »  காதலில் நயனதாரா?

காதலில் நயனதாரா?

Subscribe to Oneindia Tamil
Nayanatara with Vishal
தனக்கும், நடிகர் விஷாலுக்கும் காதல் என்று கூறப்படுவதில் சற்றும் உண்மை இல்லை. இது வெறும் வதந்தி என்று நடிகை நயனதாரா கூறியுள்ளார்.

வல்லவனுக்குப் பிறகு தமிழை தவிர்த்து வந்த நயனதாரா பில்லாவுக்குப் பின்னர் மறுபடியும் தமிழில் பிசியாகி வருகிறார். தனுஷுடன் நடித்துள்ள யாரடி நீ மோகினி முடிந்து விட்டது. அடுத்து விஷாலுடன் சத்யம் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில புதிய படங்கள் கைவசம் உள்ளது. முக்கியமாக குசேலனில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் நயனதாராவுக்கும், விஷாலுக்கும் காதல் என்று செய்தி கிளம்பியுள்ளது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நயனதாரா. விஷாலுடனோ அல்லது தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகைச் ேசர்ந்த வேறு யாருடனோ தனக்கு காதல் இல்லை என்று நயனதாரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், சில தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களில் எனக்கும், விஷாலுக்கும் காதல் ஏற்பட்டிருப்பதாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் எல்லாமே தவறான, அடிப்படையே இல்லாத செய்திகள். ஏன் இவர்கள் இப்படி எனது தனிமையில் மூக்கை நுழைக்கிறார்கள் என்று புரியவில்லை. முதலில் எனக்கு யாருடனும் காதல் இல்லை. விஷாலுடன் காதல் என்ற செய்தியைப் படித்தபோது சிரிப்பாக வந்தது.

எந்த செய்தியை பிரசுரிப்பதாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டாமா.

நானும், விஷாலும் தற்போது சத்யம் படத்தில் நடிக்கிறோம். அப்படத்தை விஷாலின் சகோதரர் தயாரிக்கிறார். இது விஷாலின் குடும்பப் படம். எனவே படம் குறித்து அவர் பேச அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் ஒரு இடத்தில் கூட என்னை தனது காதலி என்று விஷால் கூறவே இல்லை.

ஆனால் சில மீடியாக்கள்தான் தேவையில்லாமல் எனது பெயரை இழுத்துள்ளன. விஷால் ஒரு சக நடிகர், அவருடன் செட்டில் எனக்கு நல்ல உறவு உள்ளது, அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை.

இப்போதைய நிலையில் நான் எனது தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனது மனதில் வேறு எதுவும் இல்லை. கடந்த கால அனுபவத்திலிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டு விட்டேன் என்றார் அவர்.

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளீர்களாமே என்று கேட்டபோது, அதெல்லாம் பத்திரிக்கைளின் கற்பனை என்றார் நயனதாரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil