»   »  படத்துக்காக எடுத்த கவர்ச்சிப் படத்தில் ஆபாசம்-நடிகை ஸ்வேதா மேனன் புகார்

படத்துக்காக எடுத்த கவர்ச்சிப் படத்தில் ஆபாசம்-நடிகை ஸ்வேதா மேனன் புகார்

By Sudha
Subscribe to Oneindia Tamil

நான் அவனில்லை-2 , சினேகிதியே ஆகிய தமிழ்ப் படங்களிலும், மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்வேதா மேனன், தான் தற்போது நடித்து வரும் ஒரு மலையாளப் படத்துக்காக எடுக்கப்பட்ட கவர்ச்சியான காட்சி அடங்கிய ஸ்டில்லை பட விளம்பரத்திற்காக ஆபாசமான முறையில் வெளியிட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருபவர் ஸ்வேதா. இவர் தமிழில் முதலில் நடித்த படம் ரொம்ப காலத்திற்கு முன்பு வந்த ஜோதிகா நடித்த சினேகிதியே. பின்னர் சமீபத்தில் நான் அவனில்லை படத்தின் 2ம் பாகத்தில் நடித்திருந்தார்.

கவர்ச்சிகரமான நடிகையாக அறியப்பட்டவரான ஸ்வேதா தற்போது தான் கவர்ச்சியாக நடித்த காட்சியை, ஆபாசமான முறையில் பட விளம்பரங்களில் பயன்படுத்தியதாக தயாரிப்பாளர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

ரொம்ப காலத்திற்கு முன்பு அக்காலத்து கவர்ச்சி நாயகியான ஜெயபாரதி நடித்து பெரும் ஓட்டம் ஓடிய படம் ரதி நிர்வேதம். வயது அதிகமான பெண்ணுக்கும், ஒரு மாணவனுக்கும் இடையிலான காதல், காம உறவுகள் குறித்த படம் இது.

இப்படத்தை தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்கின்றனர். ஜெயபாரதி நடித்த வேடத்தில் ஸ்வேதா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகரான பாலாவுடன் இணைந்து ஸ்வேதா நடித்து வரும் காயம் படம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் படு கவர்ச்சிகரமாக நடித்திருந்தார் ஸ்வேதா. அந்த ஸ்டில்களை தற்போது படத்தின் விள்பரத்திற்காக படத் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளாராம். இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஸ்வேதா.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாடல் காட்சியில் என்னை கவர்ச்சியாக எடுத்தனர். ஆனால் அதனை ஆபாசமாக்கி போஸ்டர் விளம்பரத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். அந்த படம் ரொம்பவும் அசிங்கமாக உள்ளது. எனவேதான் போலீசில் புகார் செய்தேன் என்று கூறியுள்ளார்.

ஸ்வேதா மேனன் குறித்து நிறையப் பேருக்குத் தெரியாத தகவல் இது. மிஸ் பெங்களூராக தேர்வு செய்யப்பட்டவர் ஸ்வேதா. 1994ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியி்ல பங்கேற்று 3வது இடத்தைப் பிடித்தார். அதில் என்ன விசேஷம் என்றால், மிஸ் இந்தியாவாக அப்போது தேர்வானவர் சுஷ்மிதா சென். முதல் ரன்னர் அப் (2வது இடம்) ஆக தேர்வானவர் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Popular Malayalam actress Swetha Menon lodges complaint against a producer with Kerala police. Swetha has alleged that, Producer of movie "Kaayam" has used her image for publicity in obscene manner and asked the police to ban the posters of the said movie. Swetha Menon has acted in Tamil movies Snehithiye and Naan Avan Illai -2. She was 2nd runner up in 1994 Miss India pageant, in which Sushmitha Sen won the crown and Aishwarya Rai snatched 1st runner up.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more