Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சபரிமலையில் ஐயப்பன் சிலையைத் தொட்ட வழக்கு-நடிகை ஜெயமாலா மீது குற்றப்பத்திரிக்கை

கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் சபரிமலையில் சுவாமி ஐயப்பன் சன்னதியில் தேவ பிரசன்னம்' என்று கூறப்படும் ஜோதிடம் பார்க்கப்பட்டது. பிரசன்னம் பார்த்த ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், ஐயப்பனுக்கு பூஜைகளும், சடங்குகளும் உரிய புனிதத்தன்மையுடன் நடத்தப்படவில்லை. ஒரு பெண் சுவாமியின் விக்ரகத்தை தொட்டு வணங்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுவாமி கோபத்தில் இருக்கிறார் என்றார்.
இவர் இப்படிக் கூறிய சில நாட்களிலேயே ஜெயமாலா, சபரிமலை தேவஸ்தானத்துக்கு ஒரு கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்பினார். அதில், தான் 18 வயதாக இருக்கும்போது சபரிமலைக்கு வந்ததாகவும், சுவாமி அய்யப்பனை தொட்டு வணங்கியதாகவும், அதற்கு பிராயச் சித்தம் செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்தது. ஆனால் ஜெயமாலாவின் கூற்றை சபரிமலை தேவஸ்தானமும், மேல் சாந்தி உள்ளிட்ட பூசாரிகளும் இதை திட்டவட்டமாக மறுத்தனர். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் பம்பை நதியை தாண்டி சபரிமலை ஏறவோ, சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என்றும், கோவிலின் புகழுக்கு களங்கம் உண்டாக்க நடிகையும், உன்னிகிருஷ்ணனும் சதி செய்து இவ்வாறு கதை கட்டி விடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து குற்றப் பிரிவு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. அவர்கள் பெங்களூர் சென்று ஜெயமாலாவிடம் விசாரணை நடத்தினர்.
ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரகுபதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ஜெயமாலாவும், உன்னிகிருஷ்ணனும் திட்டமிட்டு, சபரிமலை கோவிலுக்கு இழுக்கு உண்டாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தவும், தீய எண்ணம் கொண்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலில் சுவாமியை தொட்டு வணங்கியதாக, உண்மைக்கு புறம்பாக, பொருத்தமில்லாத, நடைமுறைக்கு சாத்தியமில்லாத, தகவலை வெளியிட்டதாக தெரியவந்தது.
மேலும் தனது பிரசன்னம் உண்மையானது என்று அனைவரையும் நம்ப வைக்கும் வகையில் உண்ணிகிருஷ்ணன் ஆடிய நாடகத்திற்கு ஜெயமாலாவும், ரகுபதியும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ராண்ணி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.