»   »  பூமிகாவுக்கு சிம்பு வாய்ப்பு

பூமிகாவுக்கு சிம்பு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil
Bhoomika
திருமணமாகி கணவரோடு செட்டிலாகியுள்ள பூமிகா நடிப்பையும் தொடர்ந்து வருகிறார். இப்போது அவரைத் தேடி சிம்பு பட வாய்ப்பு வந்துள்ளதாம்.

சில மாதங்களுக்கு திருமணமான புதுப் பெண் பூமிகா. திருமணத்திற்குப் பிறகும் கூட நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தார் பூமிகா. சொன்னதைப் போல தொடர்ந்து நடித்தும் வருகிறார். தெலுங்கில் அவரது கைவசம் சில படங்கள் உள்ளனவாம்.

இந்த நிலையில் தமிழிலும் புதிய பட வாய்ப்பு வந்துள்ளதாம் பூமிகாவுக்கு. அது சிம்புவின் சிலம்பாட்டம்.

சிலம்பாட்டம் படத்தின் நாயகி ஷானா கான். அழகிய மாடலான ஷானா கான் நாயகியாக நடிக்க, இன்னொரு முக்கிய வேடத்திற்கு பூமிகாவை கேட்டுள்ளனராம். யோசித்துச் சொல்வதாக கூறியுள்ளாராம் பூமிகா.

முன்பு போல இப்போதெல்லாம் செலக்டிவாக நடிப்பதில்லையாம் பூமிகா. மாறாக, கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக் கொள்கிறாராம். அதேசமயம், பெரிய நடிகர்களின் படமாக இருந்தால் மட்டும் ஒப்புக் கொள்வதில்லையாம்.

ஏன் என்று காரணம் கேட்டால், பெரிய நடிகர்களின் படங்களில் நமக்கு முக்கியத்துவம் இருக்காது. சின்ன நடிகர்களின் படமாக இருந்தால் நமக்கும் கேரக்டரில் வெயிட் இருக்குமே, அதனால்தான் என்கிறார் பூமிகா.

முன்பு நதியா கூட இப்படித்தான் சின்ன நடிகர்களின் படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். இப்போது பூமிகா அந்த ரூட்டைப் பிடித்துள்ளார் போலும்.

Please Wait while comments are loading...