»   »  'நீலாம்பரி' திவ்யா

'நீலாம்பரி' திவ்யா

Subscribe to Oneindia Tamil
Ramya with Shaam
படையப்பாவில் ஹீரோயினாக நடித்த செளந்தர்யாவை விட வில்லியாக வந்த ரம்யா கிருஷ்ணனுக்கு எப்படி பெயர் கிடைத்ததோ, அதே போல தூண்டில் படத்தில் தனது கேரக்டர் தனக்கு பெயர் பெற்றுத் தரும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் குத்து ரம்யா என்கிற திவ்யா.

திவ்யா என்ற பெயர் மாற்றத்தோடு பொல்லாதவன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த திவ்யா, இப்போது படு சந்தோஷமாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பொல்லாதவன் கொடுத்த பெயரும், கவர்ச்சியில் அவர் காட்டிய திறமைக்கு கிடைத்த வரவேற்பும் பெருத்த சந்தோஷத்ைதக் கொடுத்துள்ளதாம் திவ்யாவுக்கு. இனிமேல் கிளாமரோடு நடிப்பிலும் கலக்குவேன் பாருங்கள் என்கிறார் திவ்யா.

பொல்லாதவனைத் தொடர்ந்து திவ்யா அதிகம் எதிர்பார்க்கும் படம் தூண்டில். ஷாம், சந்தியா, திவ்யா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் தூண்டில் படத்தில், திவ்யா ரோலுக்குத்தான் வெயிட் அதிகமாம்.

குடும்பக் குத்து விளக்கு ரேஞ்சில் இப்படத்தில் சந்தியா நடித்துள்ளார். ஆனால் படத்தில் அதிகமாக சிலம்பியிருப்பது திவ்யாதானாம். படத்தில் வில்லி ரேஞ்சுக்கு வருகிறாராம் திவ்யா.

ஆனால் இதை வில்லி கேரக்டர் என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் திவ்யா. படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த பாத்திரத்தை எப்படி வில்லத்தனம் என்று சொல்லாமல், வித்தியாசமான கேரக்டர் என்று சொன்னார்களோ அதேபோல தூண்டிலில் எனது கேரக்டரும் வித்தியாசமானது.

நீலாம்பரி கேரக்டர் ரம்யாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. அதேபோல எனக்கு தூண்டில் பட கேரக்டர் பெரும் பெயரை வாங்கிக் கொடுக்கும் என்கிறார் திவ்யா.

இப்படத்திலும் கவர்ச்சியில் கரைபுரண்டோடியிருக்கிறாராம் திவ்யா. குறிப்பாக ஷாமுடன் ஒரு பாடலில் திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டியிருக்கிறாராம்.

அப்படியா என்றால் அதை ஓவர் கிளாமர் என்று சொல்ல முடியாது. அந்தக் காட்சிக்கு அப்படித்தான் நடிக்க முடியும். உரிய காரணத்தை இயக்குநர் சொன்னதால்தான் கிளாமராக நடித்தேன். மற்றபடி வேண்டும் என்றே கிளாமர் காட்டும் பெண் அல்ல நான் என்கிறார் திவ்யா.

தூண்டில் மூலம் ரசிகர்களின் இதயங்களைக் கொய்ய தூண்டில் போடுகிறார் திவ்யா. எப்படி சிக்கப் போகிறார்களோ, என்ன மாதிரியாக சின்னாபின்னமாகப் போகிறார்களோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil