»   »  கிளாமரில் கலக்குவேன்-மேகா நாயர்

கிளாமரில் கலக்குவேன்-மேகா நாயர்

Subscribe to Oneindia Tamil
MeghaNair with Sathyaraj
பசுபதி ராசக்காபாளையம் படத்தில் கவர்ச்சி மேகமாய் வந்து போன மேகா நாயர் தங்கம் படத்தின் மூலம் ஹீரோயினாக புரமோஷன் வாங்கி விட்டார். இப்போது நாயர் கையில் நிறைய பட வாய்ப்புகளாம்.

கேரளத்து வரவான மேகா நாயர் ஒரே படத்தில் பிக்கப் ஆகி, அடுத்த படத்திலேயே புரமோஷன் பெற்ற அரிய அதிர்ஷடமுடையவர்.

தொடக்கம்தான் மேகாவின் முதல் படம். அதில் நாயகிகளில் ஒருவராக வந்திருந்தார். ஆனாலும் சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால், பசுபதி படத்தில் கவர்ச்சி கடலாய், முண்டு கட்டி வந்து போன மேகா அதில்தான் கூர்ந்த கவனிக்கப்பட்டார்.

இப்படத்தையடுத்து தங்கம் படத்தில், சத்யராஜுக்கு ஜோடி போட்டு ஹீரோயினாகி விட்டார். தங்கம் படத்தில் நடித்ததை விட கவர்ச்சியில்தான் திறமை காட்டியிருந்தார் மேகா.

அவரது கவர்ச்சித் திறமையைப் பார்த்து வியந்த பலரும் பட வாய்ப்புகளோடு மேகாவைத் துரத்த ஆரம்பித்துள்ளனராம். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் கூட மேகாவுக்கு சிறப்பான வாய்ப்புகள் வருகிறதாம்.

இப்போது தீபாவளி என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம் மேகா. இதிலும் கவர்ச்சிக்கு நிறைய வேலை இருக்கிறதாம்.

சரி வெறும் கவர்ச்சி மட்டும்தானா என்று மேகாவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. எனக்கு எது பொருத்தம் என்பது இயக்குநர்களுக்குத் தெரியும். கவர்ச்சியோடு நடிப்பிலும் கலக்குவேன் என்கிறார் மேகா.

தன்னுடைய பெயருக்குப் பின்னால் நீட்டிக் கொண்டிருக்கும் நாயரை வெட்டி விட்டாராம் மேகா. கேட்டால், ஜாதியில் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார்.

கவர்ச்சி மேகமாய் வந்து நடிப்பு மழை பெய்யும் திட்டம் போல.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil