»   »  'மகா வில்லங்க' ரோலில் நமீதா!

'மகா வில்லங்க' ரோலில் நமீதா!

Subscribe to Oneindia Tamil
Namitha
நமீதா முதன் முதலில் தலை, உடல் காட்டியுள்ள ஆங்கிலப் படமான மாயாவில் தாசி வேடத்தில் வருகிறாராம். அத்தோடு அல்லாமல், அப்படத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்ணாகவும் நடித்துள்ளாராம்.

கோலிவுட்டின் கொழு கொழு நடிகை நமீதா, முதன் முதலில் நடித்துள்ள ஆங்கிலப் படம் மாயா. எரிக் மேனிங் இயக்கியுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் (மீரா வாசுதேவனின் மாமனார்) மேற்கொண்டுள்ளார்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஷூட்டிங்கிலேயே இருக்கிறது.

இப்படத்தில் மிகவும் வில்லங்கான கேரக்டரில் நடித்துள்ளார் நமீதா. அதாவது ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உடைய தாசிப் பெண்ணாக நடித்துள்ளாராம் நமீதா. ஒரு பெண்ணின் மன உளைச்சலை, இதயத்தில் உறங்கிக் கிடக்கும் உணர்வுகளை வெளிக்காட்டும் படமாம் இது.

ஹாலிவுட் கலைஞர்களான பனித் பீனிக்ஸ், ஜைன் ஜமால், யாவோர் வெசலினோவ், சன்னி மாலிக் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

ரேண்டார் கையும், ஜேசன் கிரீகரும் படத்தின் திரைக்கதையை கவனிக்கின்றன். ஆஸ்கர் விருது பெற்ற ஷ்ரேத் இசையமைத்துள்ளார்.

படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு எழில் கொஞ்சும் ஊட்டி மற்றும் குன்னூரில் நடந்து கொண்டிருக்கிறதாம்.

இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடவுள்ளதாக நமீதா கூறுகிறார். ஆனால் ஆங்கிலத்தில் இடம் பெறும் பல காட்சிகள் கண்டிப்பாக தமிழில் இருக்காது என்றே தோன்றுகிறது நமீதாவின் கேரக்டரைப் பார்த்தால்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil