»   »  'தாமிரபரணி' பானுவுக்கு ஆக 30-ல் திருமணம்.. காதலனைக் கைப்பிடிக்கிறார்!

'தாமிரபரணி' பானுவுக்கு ஆக 30-ல் திருமணம்.. காதலனைக் கைப்பிடிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல தமிழ், மலையாள நடிகை பானுவுக்கு இந்த மாதம் 30-ம் தேதி திருமணம் நடக்கிறது. தனது நீண்ட நாள் காதலனை அவர் கைப்பிடிக்கிறார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் முக்தா என்கிற பானு. 2005-ம் ஆண்டு ‘அச்சன் உறங்காத வீடு' படத்தின் மூலம் அறிமுகமான பானு, அதன் பின்பு தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.

தாமிரபரணி

தாமிரபரணி

ஹரி இயக்கத்தில நடிகர் விஷாலின் ‘தாமிரபரணி' படம் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்றார். தொடர்ந்து பல்வேறு படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார் பானு.

குடும்பப் பிரச்சினை

குடும்பப் பிரச்சினை

பல படங்களில் நடித்தாலும், பானுவுக்கு குடும்பத்தில் பல பிரச்சினைகள். அவரது தந்தையே அவருக்கு பெரும் தொல்லைகள் தந்து வந்தார். இதனால் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

மலையாளத்தில் மட்டும்

மலையாளத்தில் மட்டும்

பிரச்சினைகள் சரியான பிறகு தமிழில் நடிக்காவிட்டாலும் மலையாளத்தில் ‘நஸ்ரானி', ‘கோல்' போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானார். இவருக்கும் மலையாள பின்னணி பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இது பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் இருவீட்டாரிடமும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

கொச்சியில்..

கொச்சியில்..

வருகிற 23-ந்தேதி கொச்சியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. 30-ந் தேதி எடப்பள்ளி ஆலயத்தில் திருமண சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Popular Tamil & Malayalam actress Banu alias Muktha is going to marry her long time lover Rinku on Aug 30th.
Please Wait while comments are loading...