»   »  ஐஸ். கர்ப்பம்? - 'ரோபோட்'டிலிருந்து விலகல்??

ஐஸ். கர்ப்பம்? - 'ரோபோட்'டிலிருந்து விலகல்??

Subscribe to Oneindia Tamil
Aishwarya Rai
நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் ரோபோட் படத்தில் அவர் நடிக்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரோபோட் நாயகி குறித்து குழப்பம் எழுந்துள்ளது.

கிட்டத்தட்ட ரூ. 150 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள படம் ரோபோட். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஈராஸ் மல்டி மீடியாஸ் நிறுவனமும் இணைந்து இதைத் தயாரிக்கவுள்ளன.

இப்படத்தை சர்வதேச அளவில் பெரிய அளவில் கொண்டு செல்ல தீர்மானித்ததால் அதற்கு ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்தால்தான் சரியாக வரும் என முடிவு செய்யப்பட்டு ஐஸ்வர்யாவை அணுகினர்.

ஆரம்பத்தில் ரஜினியின் படையப்பா, சந்திரமுகி என பல படங்களில் ஐஸ்வர்யாவை அணுகினர். ஆனால் ஐஸ்வர்யா கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரோபோட் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா சம்மதித்தார். அவருக்கு ரூ. 6 கோடி சம்பளமாக பேசப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் இல்லத்தில் வைத்து இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ரோபோட்டிலிருந்து ஐஸ்வர்யா விலகிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

அவர் கர்ப்பமடைந்துள்ளதாகவும், இதனால்தான் நடிக்க மறுத்து விட்டதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.

இப்படித்தான் சந்திரமுகி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சிம்ரன், திடீரென விலகினார். அப்போது அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக காரணம் கூறினார். இப்போது ஐஸ்வர்யாவும் அதே காரணத்தினால் ரோபோட்டிலிருந்து விலகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல் உண்மையா, இல்லையா என்று தெரியவில்லை. ஐஸ்வர்யா ராய் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதை இயக்குநர் ஷங்கரே உறுதிப்படுத்தினால்தான் உண்டு. ஆனால் அவர் வாய் திறப்பாரா என்பதுதான் பெரிய சந்தேகம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil