கோவாவில் பிப் 19-ல் லாரா தத்தா - மகேஷ் பூபதி திருமணம்!

மகேஷ் பூபதி ஏற்கெனவே திருமணமானவர். பிரபல மாடல் ஸ்வேதா ஜெய்சங்கரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அதே போல லாரா தத்தா ஏற்கெனவே கெல்லி டார்ஜி, டினோ மேரியாவுடன் நெருக்கமாக இருந்தவர்.
இப்போது பழைய உறவுகளை வெட்டிவிட்டு, இருவரும் புதிதாக இணைகின்றனர்.
இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்தது. இப்போது இருவரது திருமணம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ந்தேதி நடக்கிறது. கோவாவில் உள்ள ஆடம்பர ரிசார்ட்சில் இந்த திருமணம் நடக்கிறது. இருவரும் முதலில் சந்தித்து காதலை பரிமாறிக் கொண்டது கோவாவில்தானாம். இதனால் அங்கேயே திருமணம் மற்றும் முதலிரவை வைத்துக் கொள்ள முடிவு செய்தார்களாம்.
300 திருமண அழைப்பிதழ்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளனவாம். உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











