»   »  காதல்.. கவலை இல்லாத நேஹா

காதல்.. கவலை இல்லாத நேஹா

Subscribe to Oneindia Tamil
Neha Dhupia
காதலர் தினக் கொண்டாட்டங்கள் தேவை இல்லாதவை, அதுகுறித்து நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை என்று பாலிவுட் ஹாட் ஸ்டார் நேஹா தூபியா கூறியுள்ளார்.

உலகமே காதலர் தினத்தில் உற்சாகமாக மூழ்கிக் கிடக்கிறது. எங்கெங்கும் காதலர் தின உற்சாகம் களை கட்டியுள்ளது. ஆனால் நடிகை நேஹா தூபியா மட்டும் இந்த களேபரத்தில் பங்கு கொள்ளாமல் படு சாந்தமாக காணப்படுகிறார்.

ஏன் இந்த மயான அமைதி?, உங்களுக்கு காதலர் தினம் மீது நம்பிக்கை இல்லையா அல்லது காதலே பிடிக்காதா? என்று கேட்டபோது, காதலுக்கு நான் விரோதி இல்லை. இதெல்லாம் தேவையில்லாத கொண்டாட்டங்கள்.

காதலர் தினம் குறித்து நான் கவலையே படுவதில்லை. இளைஞர்களுக்கு இது உற்சாகத்தைக் கொடுக்கலாம். அதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் தனிப்பட்ட முறையில் இது எனக்குப் பிடிக்கவில்லை.

யாராவது பிடித்திருந்தால் தனிப்பட்ட முறையில் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு பொது இடத்தில்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை.

நமது அன்பை சொல்ல இந்த தேதிதான் வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை. வருடம் முழுவதுமே நல்ல நாட்கள்தான். நமக்கு எப்போது ஒருவர் மீது அன்பும், காதலும் பிறக்கிறதோ, அப்போதுதான் அதைச் சொல்ல வேண்டும். அதை விட்டு பிப்ரவரி 14ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்பது சுத்த ஹம்பக்.

கல்லூரியில் நான் நடித்தபோது எனக்கு யாருமே காதலர் தின வாழ்த்தோ அல்லது பரிசுகளோ கொடுத்ததில்லை.

ஆனால் என்னைச் சுற்றிலும் இருந்த எனது நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் வாழ்த்து அட்டைகள் வந்து குவியும். அவற்றையெல்லாம் நான் சின்னச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன் என்கிறார் நேஹா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil