Don't Miss!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Finance
ரூ50 கோடி வீடு,ஆடி கார் என பல..கே.எல்.ராகுல் அதியா ஷெட்டிக்கு குவிந்த பரிசுகளுக்கு வரி செலுத்தணுமா?
- News
"அது வேற வாய்!" ஷாருக்கின் பதான் படத்திற்கு தடை கேட்டு கொந்தளித்த பாஜக அமைச்சர்! இப்போ என்ன சொன்னார்
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சபரிமலை ஐயப்பன் சிலையைத் தொட்ட வழக்கு: ஜெயமாலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் சபரிமலையில் சுவாமி ஐயப்பன் சன்னதியில் தேவ பிரசன்னம்' என்று கூறப்படும் ஜோதிடம் பார்க்கப்பட்டது. பிரசன்னம் பார்த்த ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், ஐயப்பனுக்கு பூஜைகளும், சடங்குகளும் உரிய புனிதத்தன்மையுடன் நடத்தப்படவில்லை. ஒரு பெண் சுவாமியின் விக்ரகத்தை தொட்டு வணங்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுவாமி கோபத்தில் இருக்கிறார் என்றார்.
இவர் இப்படிக் கூறிய சில நாட்களிலேயே ஜெயமாலா, சபரிமலை தேவஸ்தானத்துக்கு ஒரு கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்பினார். அதில், தான் 18 வயதாக இருக்கும்போது சபரிமலைக்கு வந்ததாகவும், சுவாமி அய்யப்பனை தொட்டு வணங்கியதாகவும், அதற்கு பிராயச் சித்தம் செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்தது. ஆனால் ஜெயமாலாவின் கூற்றை சபரிமலை தேவஸ்தானமும், மேல் சாந்தி உள்ளிட்ட பூசாரிகளும் இதை திட்டவட்டமாக மறுத்தனர். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் பம்பை நதியை தாண்டி சபரிமலை ஏறவோ, சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என்றும், கோவிலின் புகழுக்கு களங்கம் உண்டாக்க நடிகையும், உன்னிகிருஷ்ணனும் சதி செய்து இவ்வாறு கதை கட்டி விடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து குற்றப் பிரிவு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. அவர்கள் பெங்களூர் சென்று ஜெயமாலாவிடம் விசாரணை நடத்தினர்.
ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரகுபதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ஜெயமாலாவும், உன்னிகிருஷ்ணனும் திட்டமிட்டு, சபரிமலை கோவிலுக்கு இழுக்கு உண்டாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தவும், தீய எண்ணம் கொண்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலில் சுவாமியை தொட்டு வணங்கியதாக, உண்மைக்கு புறம்பாக, பொருத்தமில்லாத, நடைமுறைக்கு சாத்தியமில்லாத, தகவலை வெளியிட்டதாக தெரிய வந்தது.
மேலும் தனது பிரசன்னம் உண்மையானது என்று அனைவரையும் நம்ப வைக்கும் வகையில் உண்ணிகிருஷ்ணன் ஆடிய நாடகத்திற்கு ஜெயமாலாவும், ரகுபதியும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயமாலா(50), ஜோதிடர் உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளர் ரகுபதி ஆகியோர் மீது ஈபிகோ பிரிவு 295 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்தும்படி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இன்று பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜெயமாலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தான் யாரையும் புண்படுத்தும் நோக்கோடு இதை தெரிவிக்கவில்லை என்று ஜெயமாலா கூறியுள்ளார்.