»   »  உறவை ஒப்புக் கொண்ட மீரா!

உறவை ஒப்புக் கொண்ட மீரா!

Subscribe to Oneindia Tamil
Meerajasmine
மாண்டலின் கலைஞர் ராஜேஷுக்கும், தனக்கும் இடையிலான காதலை முதல் முறையாக வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார் மீரா ஜாஸ்மின்.

அடுத்தடுத்து வதந்திகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வருபவர் மீரா ஜாஸ்மின். சில மாதங்களுக்கு முன்பு, மாண்டலின் கலைஞர் சீனிவாஸின் தம்பி மாண்டலின் ராஜேஷுக்கும், மீராவுக்கும் திருப்பதியில் கல்யாணம் நடந்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அதை மீரா உறுதியாக மறுத்தார். ஆனாலும் இருவரும் கல்யாணத்திற்குப் பின்னர் குடித்தனம் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ராஜேஷுக்கும், தனக்கும் இடையிலான உறவை ஒப்புக் கொண்டுள்ளார் மீரா.

இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில், அவர் பேசுகையில், மாண்டலின் ராஜேஷுக்கும், எனக்கும் இடையிலான காதல் உண்மைதான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளோம்.

ராஜேஷ் மிகவும் பிரபலமான கலைஞர். அவரைப் போன்ற ஒருவர் எனக்கு வாழ்க்கைத் துணையாக வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

என்னைப் பற்றி எத்தனையோ வதந்திகள் வந்து விட்டன. ஆனால் அவற்றை எழுதுவோரும், பரப்புவோரும், அதனால் நான் எவ்வளவு துயரப்படுவேன் என்பதை புரிந்து கொண்டதே இல்லை என்றார் மீரா.

ரன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மீரா தமிழில் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளார். விஜய், மாதவன், விஷால் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிருத்விராஜுடன் இணைத்துப் பேசப்பட்டார் மீரா. இருவருக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் வரை வந்தது. ஆனால் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கும், மீராவுக்கும் கல்யாணம் நடந்த செய்தி வெளியானது. இருவரும் நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் குடித்தனம் நடத்தி வருகிறார்களாம். தற்போது தங்களது உறவை மீரா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இனிமேல் வதந்திகள் வராது, மீரா தைரியமாக இருக்கலாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil