»   »  'நல்ல பிள்ளை'யாகும் நமீதா

'நல்ல பிள்ளை'யாகும் நமீதா

Subscribe to Oneindia Tamil
Namitha
கொஞ்ச நாட்களுக்கு கவர்ச்சிக்கு விடை கொடுக்க நமீதா முடிவெடுத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை, கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு திடீரென சல்வார் கமீஸ் சகிதம் படு அடக்கமாக வந்து அசத்தினார்.

நமீதாவுக்கு எப்படி டிரஸ் போட்டாலும் அது கவர்ச்சியாகத்தான் இருக்கும். அவரது உடல் வாகு அப்படி. இருந்தாலும் அவர் படு கவர்ச்சிகரமான டிரஸ்ஸையே தேர்வு செய்து போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கும்போதும் நமீதா படு கவர்ச்சிகரமான டிரஸ்களில்தான் வருவார்.

அத்தோடு இல்லாமல், போட்டியாளர்களைப் பார்த்து என்ன மச்சான், சரிடா மச்சான், சூப்பர்டா மச்சான் என்று செல்லமாக 'கொஞ்ச' வேறு செய்வார். அத்தோடு மட்டுமா, அடிக்கடி பறக்கும் முத்தங்களைக் கொடுத்து அரங்கத்தையே அனலாக்குவார்.

நமீதாவின் இந்த கிளாமரும், பேச்சும் பாமகவினரை கோபப்படுத்தியுள்ளது. சமீபத்தில், சட்டசபையில் கூட இது எதிரொலித்தது. ஓரிரு நாட்களுக்கு முன்பு பாமக மகளிர் சங்கம் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடில், சல்வார் கமீஸ் சகிதம் படு அடக்கமாக வந்து அசத்தினார் நமீதா. நமீதாவின் 'க்ளீவேஜ்' பிரியர்கள் அவர் வந்த கோலத்தைப் பார்த்து ஏமாந்து போனார்கள்.

இதுகுறித்து நமீதா கூறுகையில், இனிமேல் கவர்ச்சிகரமான உடையில் வர மாட்டேன். குறிப்பாக குட்டையான உடையில் வர மாட்டேன்.

எனக்கு குட்டையான, டைட்டான உடைகள்தான் பிடிக்கும் (ரசிகர்களுக்கும் அப்படித்தானுங்கம்மணி, ஹி,ஹி!) ஆனால் எனது டிரஸ்ஸை வைத்து பெரிய விவாதமே நடப்பதாக அறிந்தேன். எனவே எதிர்காலத்தில் இதை தவிர்க்க முடிவு செய்துள்ளேன். இருப்பினும் சினிமாவில் எனது கவர்ச்சி தொடரும் என்றார்.

இதை விட சூப்பர் விஷயம், இந்த நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில், கலக்கலான சேலையில் வந்து அம்சமாக அசத்தப் போகிறாராம் நமீதா.

கூல் 'மச்சான்ஸ்' கூல்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil