»   »  கோபியை மணந்தார் நடிகை விந்தியா

கோபியை மணந்தார் நடிகை விந்தியா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vindhya with Gopi
நடிகை விந்தியாவுக்கும், நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபிக்கும் இன்று குருவாயூரில் திருமணம் நடந்தது.

நடிகை சங்கவி, டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தினர். இத் திருமணத்துக்கு மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு வந்திருந்தனர்.

விந்தியாவின் பி.ஆர்.ஓ. ஜி.பாலன் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வி4 எண்டர்டெயினர்ஸ் அமைப்பின் மௌனம் ரவி, டயமண்ட் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர்.

விந்தியாவுக்கும் கோபிக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது. ஆட்டோமொபைல் எஞ்சினியரான கோபி தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாலும், அவரும் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்காக நாளை சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil